பீகாரில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர் படுகொலை- 6 இந்துத்துவா தீவிரவாதிகள் கைது
பாட்னா: பீகாரில் தேசிய கொடியை பிடித்தபடி குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அமீர் ஹன்ஸ்லா (18) படுகொலை வழக்கில் இந்துத்துவா தீவிரவாதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரின் புல்வாரி ஷரீப் பகுதியில் டிசம்பர் 21-ல் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 18 வயது இளைஞரான அமீர் ஹன்ஸ்லாவும் பங்கேற்றார். இதில் கையில் தேசிய கொடியை பிடித்தபடி அமீர் முழக்கங்களை எழுப்பினார்.

இப்பேரணியில் வன்முறை ஏற்பட்ட நிலையில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் அமீர் ஹன்ஸ்லாவும் பேரணியைவிட்டு வெளியேறி வீட்டுக்கு திரும்பினார். ஆனால் அமீர் ஹன்ஸ்லா வீட்டுக்கு திரும்பவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில் 10 நாட்களுக்குப் பின்னர் அமீர் ஹன்ஸ்லாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணைகளில் அமீர் ஹன்ஸ்லா அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளில் இந்து புத்ரா சங்காதன், இந்து சமாஜ் சங்காதன் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்து புத்ரா சங்காதன் உள்ளிட்ட 19 இந்துத்துவா தீவிரவாத அமைப்புகளை பீகார் போலீஸ் கண்காணித்து வந்தனர்.
அத்துடன் சமூக வலைதளங்களில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறையில் ஈடுபட வேண்டும் என்று வீடியோ பதிவுகளை வெளியிட்ட 2 இந்துத்துவா தீவிரவாதிகளையும் பீகார் போலீசார் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications