வேற இடமே இல்லையா.. சத்ருகன் சின்ஹா வீட்டு வழியாதான் அமித் ஷா பேரணி போகணுமா.. பாட்னாவில் பரபரப்பு
பாட்னாவில் சத்ருகன் சின்ஹா வீட்டு வழியாக பேரணியாக சென்று சீண்டி விட்டுள்ளார் அமித்ஷா
பாட்னா: பாஜக சும்மாவே இருக்காது போல. பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடும் நடிகர் சத்ருகன் சின்ஹாவை விடாமல் சீண்டி வருகிறார்கள்.
இப்போது பாட்னாவில் உள்ள சத்ருகன் சின்ஹாவுக்குச் சொந்தமான வீடு அமைந்துள்ள பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷாவின் பேரணியை நடத்துகிறது பாஜக. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் சத்ருகன் சின்ஹா இதை வரவேற்றுள்ளார். கூடவே, தாராளமா வரட்டும். நல்ல மனதோடு வந்தால் டீ, பக்கோடா தருவோம் என்று நக்கலும் அடித்துள்ளார்.

பாஜக தலைமை
வாஜ்பாயியின் தீவிர அபிமானிதான் சத்ருகன் சின்ஹா. ஆனால் மோடிக்கு கடும் எதிர்ப்பானவர். மோடியின் தவறுகளை, மோடி அரசின் குளறுபடிகளை கடுமையாக பகிரங்கமாக கண்டித்து வந்தவர். இதனாலேயே அவரை பாஜக தலைமைக்குப் பிடிக்காமல் போயிற்று.

பாட்னாசாஹிப்
தொடர்ந்து கடுமையாக போட்டுத் தாக்கி வந்த சின்ஹா கடைசியில் காங்கிரஸில் இணைந்தார். தற்போது பாட்னாசாஹிப் தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

அமித்ஷா பேரணி
இந்த நிலையில்தான் அமித்ஷாவின் பேரணி , பாட்னாவின் கதம் குவான் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில்தான் சத்ருகன் சின்ஹாவுக்குச் சொந்தமான வீடு உள்ளது. குறுகிய தெருக்களைக் கொண்ட பகுதி இது. மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதியும் கூட. இந்தப் பகுதிகள் வழியாகத்தான் அமித் ஷா பேரணியாக போகப் போகிறார். கடைசியில் காந்தி மைதானில் போய் பேரணி முடியும்.

விபரீதம்
சத்ருகன் சின்ஹா வீட்டு வழியாக பாஜக பேரணிக்கு ஏற்பாடு செய்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வேண்டும் என்றே செய்கிறது பாஜக. இதனால் சத்ருகன் சின்ஹாவை கடுப்படிக்க வேண்டும் என்பதே அதன் திட்டம். இது தேவையில்லாதது, விபரீதமானது என்று காங்கிரஸ் கண்டித்துள்ளது.

பக்கோடா
சத்ருகன் சின்ஹா இதற்கெல்லாம் பயப்படுகிறவரா இல்லையே. தாராளமாக பேரணி போகட்டும். முடிந்தால் டீ, பக்கோடா கூட தருகிறோம். ஆனால் வம்பிழுக்க நினைத்தால் தக்க பதிலடியை பீகார் குடும்பம் அமித் ஷாவுக்குக் கொடுக்கும் என்று எச்சரித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications