பிரசாந்த் கிஷோருக்கு 2 இடங்களில் ஓட்டு.. 3 நாள் கெடுவில் நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார். நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலில் அவரது கட்சி களமிறங்கி உள்ளது. இந்நிலையில் தான் பிரசாந்த் கிஷோருக்கு 2 இடங்களில் ஓட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பிரசாந்த் கிஷோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி 3 நாட்கள் கெடு விதித்துள்ளது.

தேர்தல் வியூக வகுப்பாளராக வலம் வந்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் பீகாரை சேர்ந்தவர். இந்நிலையில் தான் பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். பீகார் சட்டசபை தேர்தலில் அவரது கட்சி போட்டியிடுகிறது. இதற்கிடையே தான் பிரசாந்த் கிஷோருக்கு 2 இடங்களில் ஓட்டுரிமை உள்ளது சர்ச்சையாகி உள்ளது.

bihar-election-election-commission-sent-notice-to-prashant-kishor-over-2-voter-enrolments

பிரசாந்த் கிஷோருக்கு பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் ஓட்டுரிமை உள்ளது விவாதத்தை கிளப்பி உள்ளது. நம் நாட்டில் ஒருவருக்கு ஒரு ஓட்டுரிமை தான் உண்டு. இதனால் பிரசாந்த் கிஷோர் விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.

அதாவது பிரசாந்த் கிஷோருக்கு பீகார் மாநிலம் ரோஹ்டாஸ் மாவட்டம் கார்ஹஹார் தொகுதியில் கோனார் நடுநிலை பள்ளி வாக்குச்சாவடி எண் 621ல் ஓட்டு உள்ளது. அதேபோல் மேற்கு வங்க மாநிலம் பாபனிபூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ரானிஷான்கரி லேனில் உள்ள தூய ஹெலன் பள்ளி வாக்குச்சாவடியிலும் ஓட்டுரிமை உள்ளது.

நம் நாட்டில் இரட்டை வாக்குரிமை வைத்திருப்பது சட்டவிரோதமானது. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950, பிரிவு 17 ன்படி குற்றமாகும். இதனால் பீகார் தேர்தல் அதிகாரி சார்பில் பிரசாந்த் கிஷோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் விளக்கம் அளிக்கும்படி அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பிரசாந்த் கிஷோர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் பதிலளிக்காவிட்டால் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 31ன் படி அவருக்கு அபராதம் விதிக்கப்படும். இல்லாவிட்டால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். இல்லாவிட்டால் அபராதத்துடன் சிறை தண்டனையும் கிடைக்க வாய்ப்புள்ளது. இது பிரசாந்த் கிஷோருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரில் பிரசாந்த் கிஷோரின் ‛ஜன் சுராஜ்' கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடவில்லை. பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்த கூட்டணியில் மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக்ஜன சக்தி (ராம்விலாஸ்), முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சியின் எச்ஏஎம் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகளும் உள்ளன.

மறுபுறம் எதிர்க்கட்சிகள் ‛மகாகத்பந்தன்' என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடிஎனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் லிபரேஷன் - சிபிஐஎம்எல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பீகாரில் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நவம்பர் 6ம் தேதியும், 2வது கட்டமாக நவம்பர் 11ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு நவம்பர் 14ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. பீகாரை எடுத்து கொண்டால் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மொத்தம் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+