ஷாக்.. 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிதீஷ் குமார்.. முதலிடத்திற்கு பாஜக - ஆர்ஜேடி அடிதடி!

நிதிஷ்குமார் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் காலை முதல் நடந்து வரும் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் முதல்வர் நிதீஷ் குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட ஆரம்பித்தன. இந்த தேர்தலில் 3 முனை முக்கியப் போட்டி நிலவியது. ஐக்கிய ஜனதாதளம் - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆர்ஜேடி - காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய மகா கூட்டணி மற்றும் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகியவை மோதியுள்ளன.

வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ளன நிலையில் இன்று காலை வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

நிதிஷ்குமார்

நிதிஷ்குமார்

இந்த வாக்கு எண்ணிக்கையில் நிதீஷ் குமார் கட்சிக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. தபால் வாக்குகளில் ஆர்ஜேடியும், பாஜகவும் முதலிடத்தைப் பிடிக்க கடுமையாக முட்டி மோதி வருகின்றன. ஆனால் ஆட்சியில் உள்ள நிதீஷ் குமார் கட்சியோ 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 4வது இடத்தில் உள்ளது.

 அதிருப்தி

அதிருப்தி

அதாவது அரசு ஊழியர்கள் மத்தியில் நிதீஷ் குமார் மிகப் பெரிய கெட்ட பெயரை வாங்கி வைத்துள்ளது உறுதியாகியுள்ளது. அரசு ஊழியர்களே இந்த அளவுக்கு அதிருப்தில் இருக்கும்போது மக்கள் எந்த அளவுக்கு கடுப்பில் இருக்கக் கூடும் என்பதை ஊகிக்க முடிகிறது..

 தபால் ஓட்டுக்கள்

தபால் ஓட்டுக்கள்

தபால் வாக்குகள் பெரிய அளவில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்காது என்றாலும் கூட இந்த வாக்குகளில் நிதீஷ் குமாருக்கு முதலிடம் கிடைக்கவில்லை என்பது முக்கியமானது. ஏன் குறைந்தபட்சம் 2வது இடத்தில்கூட அவர் இல்லை. மாறாக 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதால் மக்கள் வாக்குகள் எந்த அளவுக்கு ஆணித்தரமாக போடப்பட்டிருக்கும் என்பதை ஊகிக்கலாம்.

ஆர்ஜேடி

ஆர்ஜேடி

முதலிடத்தைப் பொறுத்தவரை ஆர்ஜேடியும், பாஜகவும் கிட்டத்தட்ட சமமாக போய்க் கொண்டுள்ளன. இதுதான் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது... இதை நிலை மக்கள் வாக்குகளை எண்ணும்போதும் ஏற்பட்டால் குதிரை பேரம் பீகாரில் மிகப் பெரிய உச்சத்தை எட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.. ஜனநாயகம் மிகப் பெரிய கேள்விக்குறியாகக் கூடிய வாய்ப்புகளையும் மறுக்க முடியாது.

பீகார்

பீகார்

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை "நாங்க ஒரு ஓரமா உக்காந்துக்கிறோம்.. நீங்க பாட்டுக்கு சமத்தா விளையாடுங்க" என்று சொல்வது போல 4வது இடத்தில் தேங்கி போய் கிடக்கிறது. பீகாரில் காங்கிரஸ் கட்சி சுத்தமாக படுத்தே விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்... அந்த அளவுக்குத்தான் அந்தக் கட்சியின் நிலை அங்கு உள்ளது என்பதை இந்த தேர்தலும் நிரூபிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Recommended Video

    Bihar-ல் ஆட்சியை தீர்மானிக்குமா இந்த 0.39% வாக்குகள்? | Oneindia Tamil
     முதலிடத்துக்கு போட்டி

    முதலிடத்துக்கு போட்டி

    தற்போதைய நிலவரப்படி ஆர்ஜேடி - பாஜக இடையேதான் ஆட்சியைப் பிடிக்க பெரும் அடிதடி நிலவும் என்று தெரிகிறது. இதில் நிதீஷ் குமார் கதி என்னாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்... ஒருவேளை பாஜக, நிதீஷ் குமார் கட்சியை விட அதிக இடத்தை பிடித்து நாளை ஆட்சியையைும் கைப்பற்றும் நிலை வந்தால் முதல்வர் வேட்பாளராக அப்போதும் நிதீஷ் குமார்தான் முன்னிறுத்தப்படுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+