பாஜக பக்கம் இனி வர முடியாது.. கதவுகளை அடைச்சிட்டோம்.. நிதிஷ் குமாரை விட்டு விளாசிய அமித்ஷா
பாட்னா: பீகாரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது பாஜக கூட்டணியில் இருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து ஆட்சி நடத்தி வரும் முதல்வர் நிதிஷ் குமார் இனி ஒருபோதும் பாஜக கூட்டணிக்கு வர முடியாது. அவருக்கான கதவுகளானது அடைக்கப்பட்டு விட்டது என்று பேசினார்.
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா இன்று பீகார் மாநிலம் சென்றார்.
அங்குள்ள நவாடா மாவட்டத்தில் ஹிசுவா பகுதியில் பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமித்ஷா, பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

நிதிஷ் குமாரை விமர்சித்த அமித்ஷா
மத்தியில் ஆளும் பாஜக அரசின் சாதனைகள் குறித்து பேசிய அமித்ஷா, பாஜக கூட்டணியில் இருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து ஆட்சி நடத்தி வரும் முதல்வர் நிதிஷ் குமாரையும் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அமித்ஷா கூறியதாவது:- நிதிஷ்குமார் இனி ஒருபோதும் பாஜக கூட்டணிக்கு வர முடியாது. அவருக்கான கதவுகளானது அடைக்கப்பட்டு விட்டது.

ஒருபோதும் பலிக்காது
பிரதமராகும் நிதிஷ் குமாரின் கனவு ஒரு போதும் பலிக்கப் போவது இல்லை. ஏனெனில் அந்த பதவி காலியாக இல்லை. ஒருவருக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இன்னொருவருக்கு (தேஜஸ்வி யாதவ்) முதல்வராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. லாலு பிரசாத் யாதவிற்கும் நிதிஷ் குமாருக்கும் முழு வேறுபாடுகள் உள்ளன. பீகார் மக்கள் 40 மக்களவை தொகுதிகளிலும் பிரதமர் மோடிக்காக வாக்கு அளிப்பார்கள்.

வேரோடு வீழ்த்துவோம்
பீகாரில் காட்டாட்சி நடத்தி வந்த லாலு பிரசாத் யாதவுடன் அதிகாரத்திற்காக நிதிஷ் குமார் கை கோர்த்துள்ளார். பச்சோந்தி, துரோகி, பாம்பு என மிகக் கடுமையான வார்த்தைகளால் நிதிஷ் குமாரை தேஜஸ்வி யாதவ் முன்பு சாடியிருந்தார். ஆனால், அதிகாரத்திற்காக இதையெல்லாம் நிதிஷ்குமார் மறந்துவிட்டார். நாங்கள் மக்களிடம் சென்று மெகா கூட்டணி அரசை வேரோடு வீழ்த்துவோம்.

நிதிஷ் குமாருடன் பாஜக கைகோர்க்காது
பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் தீர்மானித்து விட்டனர். நிதிஷ் குமாரும் லாலு பிரசாத் யாதவும் திருப்தி படுத்தும் அரசியலில் ஈடுபடுகின்றனர். இது தீவிரவாதம் வளர்வதற்கு உதவுகிறது. இனவாதம் என்ற விஷத்தை பரப்பும் நிதிஷ் குமாருடன் ஒருபோதும் பாஜக கைகோர்க்காது. ஐக்கிய ஜனதா தளம், ரஷ்ட்ரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ராமர் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்தன. இவ்வாறு அவர் பேசினார்.
-
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications