பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருந்துங்க.. இல்லாவிட்டால் லாலு யாதவை போல் கம்பி தான் எண்ணுவீர்கள்.. நிதீஷுக்கு சாபம் விடும் பாஜக

Google Oneindia Tamil News

பாட்னா: 'திருந்துங்க.. இல்லாவிட்டால்.. லாலு யாதவை போல் சிறையில் கம்பி என்ன வேண்டிய சூழல் ஏற்படும்' என பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை பாஜக தலைவரும், பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவருமான விஜய் குமார் சின்ஹா விமர்சித்துள்ளார்.

பீகாரில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நிதீஷ் குமாரின் ஜேடியு கட்சி பாஜகவுடன் இணந்து போட்டியிட்டு தேர்தலில் வெற்றியும் பெற்றது.

மேலும் குறைந்த தொகுதிகளை பெற்றிருந்தாலும் நிதீஷ் குமாருக்கு பாஜக முதல்வர் பதவியை வழங்கியது.

வலுவடைகிறதா மூன்றாவது அணி? பீகார் முதல்வர் நிதீஷ் குமாருடன் கேசிஆர் சந்திப்பு.. பின்னணி! வலுவடைகிறதா மூன்றாவது அணி? பீகார் முதல்வர் நிதீஷ் குமாருடன் கேசிஆர் சந்திப்பு.. பின்னணி!

 பாஜக நிதிஷ் மோதல்

பாஜக நிதிஷ் மோதல்

இந்த நிலையில் திடீரென பாஜகவுடன் கூட்டணியை உதறிவிட்டு தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடியுடன் கூட்டணி வைத்து மீண்டும் பீகாரின் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்றார். பல மாநிலங்களில் பாஜக மேற்கொண்ட இந்த வித்தையை நிதீஷ் குமார் பீகாரில் அரங்கேற்றினார். இதனால் அப்செட்டான பாஜக நிதீஷ் குமாரை குறை கூறி வந்தது. அப்போதிலிருந்து பாஜக மீது நிதீஷ் குமாரும், நிதீஷ் குமார் மீது பாஜகவினரும் குறை கூறி வருகின்றன.

 நிதிஷ் குமார் சிறை செல்வார்

நிதிஷ் குமார் சிறை செல்வார்

இந்நிலையில், பாஜக தலைவர் விஜய் குமார் சின்ஹா, லாலு யாதவ் போல் விரைவில் நிதீஷ் குமாரும் சிறைக்கு செல்வார் என்று ​​நிதீஷ் குமாரை தாக்கி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பீகார் மாநில பாஜக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜய் குமார் சின்ஹா ​​கூறுகையில், ''ஊழல் இல்லா நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் நரேந்திர மோடி உறுதி பூண்டுள்ளார். ஊழல் மற்றும் குற்றங்கள் நடக்காத நாட்டை உருவாக்க பிரதமர் மோடி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

 50 இடங்களுக்கு மேல் கிடைக்காது

50 இடங்களுக்கு மேல் கிடைக்காது

மக்களும் லஞ்சம், ஊழல் இல்லா நாட்டை உருவாக்க உறுதி பூண்டுள்ளனர். எனவே நிதீஷ் குமார் தான் செய்த பாவங்களை நினைத்து பார்க்க வேண்டும். இல்லையெனில் அவரது மூத்த சகோதரர் (லாலு யாதவ்) சென்ற இடத்துக்கே அவரும் செல்வார்'' என்று கூறினார். நிதீஷ் குமார் அண்மையில் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜனதாவுக்கு 50 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்று கூறிய நிலையில் அதற்கு பதில் தரும் விதமாக இந்த கருத்து பார்க்கப்படுகிறது.

 மந்த நிலையை வெளிப்படுத்துகிறது

மந்த நிலையை வெளிப்படுத்துகிறது

இந்த நிலையில், நிதீஷ் குமார் இது தொடர்பான கருத்தை திரும்ப்பெற்றார். எனினும் இதை விடாமல் பிடித்துக்கொண்ட பாஜனதா நிதீஷ் குமாருக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், பாஜக தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தர்கிஷோர் பிரசாத் கூறுகையில், ''பாஜகவுக்கு 50 இடங்களே கிடைக்கும் என்று நிதீஷ் குமார் கூறுவது அவரின் அரசியல் மந்த நிலையையே வெளிப்படுத்துகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் தான் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் நிதீஷ் குமார் கட்சி 16 இடங்களை பெற்றது" என்று வசைபாடினார்.
இந்த நிலையில், நிதிஷ் குமார் இது தொடர்பான கருத்தை திரும்ப்பெற்றார். எனினும் இதை விடாமல் பிடித்துக்கொண்ட பாஜனதா நிதிஷ் குமாருக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், பாஜக தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தர்கிஷோர் பிரசாத் கூறுகையில், ''பாஜகவுக்கு 50 இடங்களே கிடைக்கும் என்று நிதிஷ் குமார் கூறுவது அவரின் அரசியல் மந்த நிலையையே வெளிப்படுத்துகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் தான் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் நிதிஷ் குமார் கட்சி 16 இடங்களை பெற்றது" என்று வசைபாடினார்.

English summary
BJP leader and Bihar state leader of opposition Vijay Kumar Sinha has criticized Bihar Chief Minister Nitish Kumar saying, 'Don't do it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X