இந்திய அரசியலில் "கோல்டன்" வாய்ப்பு! அந்த முடிவை எடுக்க போகும் நிதிஷ் குமார்? பாஜகவிற்கு விழும் அடி?
பாட்னா: பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வெற்றி நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய கோல்டன் வாய்ப்பு ஒன்றை கொடுத்துள்ளது.
நிதிஷ் குமாருக்கு இருக்கும் கோல்டன் வாய்ப்பை பற்றி பார்க்கும் முன் 2014ல் நடந்த ஒரு சம்பவம் பற்றி பார்க்கலாம். 2014 லோக்சபா தேர்தலில்.. பாஜக வெல்லும் முன்.. பாஜக தனி மெஜாரிட்டி பெறுமா என்ற சந்தேகம் இருந்தது.

தனி மெஜாரிட்டி உடன் பாஜக ஆட்சியை பிடிக்குமா என்ற கேள்வி நிலவியது. முக்கியமாக தென் மாநிலங்களை பாஜக கைப்பற்ற வாய்ப்பு குறைவாகவே பார்க்கப்பட்டது,. அப்போது பலரின் பார்வையும் நிதிஷ் குமார் மீதுதான் இருந்தது.
நிதிஷ் குமார் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் சப்போர்ட் செய்வாரா.. பாஜக ஆட்சி செய்ய அவர் ஆதரவு கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்தது. அதோடு அவர் மோடிக்கு ஆதரவு கொடுக்க மாட்டார். குஜராத்தில் மோடி ஆட்சியை விமர்சனம் செய்தவர் நிதிஷ். அப்படி இருக்க 2014ல் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் நிதிஷ் பாஜகவிற்கு ஆதரவு கொடுப்பாரா.. என்ற கேள்வி இருந்தது.அதோடு அவர் பாஜக ஆட்சிக்கு ஆதரவு தருவார்.. ஆனால் மோடிக்கு தர மாட்டார் என்று செய்திகள் வந்தன.
ஆனால் 2014ல் அதற்கான தேவை ஏற்படவில்லை. அப்போது பாஜக மெஜாரிட்டி பெற்றது. மோடியை ஆதரிக்க அப்போது ஏற்படாத அந்த தேவை இப்போது 10 ஆண்டுகள் கழித்து ஏற்பட்டு உள்ளது. இவரின் ஆதரவு இருந்தால் மட்டுமே மோடி 3வது முறை ஆட்சியில் அமர முடியும்.
2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 240 இடங்களில் பாஜக வென்றுள்ளது. பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை.
இவர்களின் ஆதரவு எல்லாம் இருந்தால்தான் பாஜக ஆட்சி அமைக்க முடியும். இனிமேல் இவர்கள் சொல்வதுதான் சட்டம் என்ற நிலைமை பாஜகவிற்கு ஏற்பட்டு உள்ளது.
மெஜாரிட்டி கணக்கு: 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் இன்னும் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
பாஜக ஆட்சி அமைக்க பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர். பாஜக ஆட்சி அமைக்க ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி அமைக்க முடியாது.
கோல்டன் வாய்ப்பு: பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வெற்றி நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய கோல்டன் வாய்ப்பு ஒன்றை கொடுத்துள்ளது.
1. நிதிஷ் குமார் பாஜகவிடம் பிரதமர் அல்லது துணை பிரதமர் பதவியை கேட்கலாம். ஏனென்றால் இந்தியா கூட்டணி இவரை பிரதமர் அல்லது துணை பிரதமராக்க ரெடியாக கூட இருக்கும்.
2, பாஜக அமைச்சரவையில் நிதி, பாதுகாப்பு, சாலை போக்குவரத்து துறைகளை கேட்கலாம். இந்தியா கூட்டணி அதை இவருக்கு எளிதாக கொடுக்கும்.
3. பீகாருக்கான் சிறப்பு முதலீடுகள் தொடர்பான திட்டங்கள் பற்றிய உதவிகளை கேட்கலாம்.
4. பீகாரில் மாநில அளவில் கட்சியை காக்க பாஜகவை விட தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி பலம் நிதிஷுக்கு தேவை. இதனால் எதிர்காலத்தை மனதில் வைத்து நிதிஷ் இந்தியா பக்கம் கூட செல்லலாம். அந்த முடிவை எடுத்தால் அது பாஜகவிற்கு அடியாக இருக்கும்.
5. மீண்டும் மோடி வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக நிதிஷுக்கு உள்ள தனிப்பட்ட பவர் குறையலாம்.
6. மோடிக்கு பதில் வேறு ஒருவரை பிரதமராக்க இவர் கோரிக்கை வைக்கலாம்.
இந்த முறை இவர் சொல்வதுதான் சட்டம் என்பதால் மேலே சொன்னதை தாண்டி பல விஷயங்களை இவர் கண்டிப்பாக கேட்கலாம். அரசியல் ரீதியாக நிதிஷ் வாழ்க்கையில் வராத பெரிய தங்கமான வாய்ப்பு அவருக்கு இப்போது வந்துள்ளது.
-
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications