ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. சாந்தி செய்த "காரியத்தை" பார்த்தீங்களா.. எல்லாம் மாமனாரால் வந்த வினை
கள்ளக்காதலனுடன் சாந்தி ஓடிவிட்ட நிலையில், கணவன் கைதாகி விட்டார்
பாட்னா: சாந்தி செய்த காரியத்தினால் அதிர்ந்து போய் உள்ளனர் அவரது குடும்பத்தினர்.. கடைசியில் அவரது கணவரின் நிலைமைதான் பரிதாபத்தில் வந்து முடிந்துள்ளது.
பீகார் மாநிலம் மோதிஹரி மாவட்டத்தில் உள்ளது லட்சுமிபூர் என்ற இடம்.. இங்கு வசித்து வந்தவர் தினேஷ் ராம்... இவரது மனைவி சாந்தி தேவி..
கடந்த 2016-ல் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.. 6 வருடம் இவர்களின் திருமண வாழ்க்கை, கருத்து முரண்பாடுகளுடனேயே சென்று கொண்டிருந்தது.

சாந்தி
பிறகு திடீரென ஒருநாள் சாந்தியை காணோம்.. வீட்டை விட்டு போய்விட்டார்.. அந்த நேரம் பார்த்து, சாந்தியின் அப்பா, யோகேந்திர யாதவ் மகளை பார்க்க வீட்டிற்கு சென்றுள்ளார்.. அங்கு மகளை காணோம் என்பதை அறிந்ததும் அதிர்ச்சியடைந்து போலீசுக்கு சென்று புகார் தந்தார்.. தன்னுடைய மகள் காணாமல் போனதற்கு மருமகன் தினேஷ் ராம்தான் காரணம், கல்யாணம் ஆனது முதலே மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார்கள் என்று புகார் சொன்னார்.

தினேஷ்
அதுமட்டுமல்ல, சீதனமாக பைக், 50 ஆயிரம் பணம் வேண்டும் என்று தினேஷ் ராம் கேட்டு வந்த நிலையில்தான், மகளை தற்போது காணவில்லை, என் மகளை தினேஷ்தான் கொன்றுவிட்டார், அது குறித்து நடவடிக்கை வேண்டும்" என்று அந்த புகாரில் மேலும் குற்றஞ்சாட்டி இருந்தார்... இந்த புகாரின்பேரில் போலீசாரும், தினேஷ் ராமை கைது செய்து ஜெயிலில் அடைத்துவிட்டனர்...

போன் சிக்னல்
இதனிடையே, சாந்தி இறந்துவிட்டதாக திடீரென ஒரு தகவல் வந்தது.. எனவே, உடலையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீஸார் அடுத்தக்கட்ட விசாரணையில் இறங்கினர்.. அப்போதுதான், சாந்தியின் போன் சிக்னல் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடித்தால், ஏதாவது க்ளூ கிடைக்கும் என்று நம்பி , அதை கண்காணிக்கவும் ஆரம்பித்தனர்.

போன் சிக்னல்
அந்த போன் சிக்னல் பஞ்சாப்பின் ஜலந்தரில் இருப்பது தெரிய வரவும், தனிப்படை போலீஸார் ஜலந்தருக்கு விரைந்து சென்றனர்.. அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி ஒருவழியாக சாந்தியின் செல்போன் சிக்னல் காட்டிய இடத்தை அடைந்தனர்.. ஏதாவது க்ளூ கிடைக்கும் என்று பார்த்தால், சாந்தியே அங்கு உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.. அங்கே தன்னுடைய கள்ளக்காதலனுடன் சாந்தி குடும்பம் நடத்தி கொண்டிருப்பதை அறிந்து அதற்கு மேல் அதிர்ச்சி அடைந்தனர்.

சிக்கிய சாந்தி
பிறகு சாந்தியை விசாரணைக்காக பீகார் மாநிலம் மோதிஹாரிக்கு அழைத்து வந்தனர்.. மேலும், இத்தனை காலமும் பரிதாபமாக ஜெயிலுக்குள் அடைபட்டுகிடந்த கணவர் தினேஷையிம் விடுவித்தனர்.. அதுமட்டுமின்றி சாந்தியின் அப்பா, அன்று தந்த புகார் உண்மைதானா? என்பது குறித்தும் விசாரணையில் குதித்துள்ளனர்.. தினேஷ் விடுவிக்கப்பட்ட நிலையில், சாந்தி வசமாக சிக்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications