பீகாரில் ஷாக்.. தேர்தலுக்கு நடுவே சாலையோரம் கொட்டப்பட்ட விவிபேட் ஸ்லிப்புகள்.. அதிகாரி சஸ்பெண்ட்
பாட்னா: பீகாரில் முதற்கட்டமாக கடந்த 6ம் தேதி 121 சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இந்நிலையில் தான் ஓட்டுப்பதிவு நடந்த சமஸ்திபூர் மாவட்டத்தில் 100க்கும் அதிகமான விவிபேட் ஸ்லிப்புகள் சாலையோரம் கொட்டப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் தேர்தல் அதிகாரி விளக்கம் தந்துள்ளோடு, அலட்சியம் காட்டிய ஊழியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பீகாரில் முதற்கட்ட தேர்தல் நவம்பர் 6ம் தேதி 121 சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.

2வது கட்டமாக நவம்பர் 11ம் தேதி 122 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு, நவம்பர் 14ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு முதற்கட்டமாக கடந்த 6ம் தேதி தேர்தல் நடந்தது. இந்நிலையில் தான் நேற்று சாலையோரம் ஏராளமான விவிபேட் ஸ்லிப்புகள் கிடந்தது. நாம் இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் வகையிலான அந்த ஸ்லிப்புகள் சாலையோரம் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழப்பத்தை ஏற்படுத்தியது. தேர்தல் நேற்று முடிந்த 2 நாளில் இந்த சீட்டுகள் வெளியே வீசப்பட்டு உள்ளதால் எதிர்க்கட்சியான ஆர்ஜேடி சந்தேகம் கிளப்பியது.
இந்நிலையில் தான் மாவட்ட தேர்தல் அதிகாரி உடனடியாக விசாரணை மேற்கொண்டார். அப்போது அங்கு கொட்டப்பட்டு இருந்த விவிபேட் ஸ்லிப்புகள் மாதிரி வாக்குப்பதிவின்போது வெளிவந்தவை என்று தெரிவிக்கப்பட்டது. பொதுவாக தேர்தலுக்கு முன்பு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அப்போது மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். அப்படி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டபோது தான் கிடைத்த ஸ்லிப்புகள் தான் சாலையோரம் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி சமஸ்திபூர் கலெக்டர்ரோஷன் குஷ்வாஹா உறுதி செய்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛விவிபேட் ஸ்லிப்புகள் மாதிரி வாக்குப்பதிவின்போது கிடைத்தவை. இவிஎம் எண்ணின் அடிப்படையில் அதனை கண்டுபிடித்தோம். தேர்தல் சமயத்தில் கிடைத்தவை இல்லை. இருப்பினும் இந்த விஷயத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார். அதேபோல் இந்திய தேர்தல் ஆணையமும் விவிபேட் ஸ்லிப்பை வெளியே கொட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
அதன்படி உதவி தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது. மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணையை தொடங்கி உள்ளார்.
பீகாரை எடுத்து கொண்டால் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பீகாரில் பாஜக கூட்டணி மற்றும் ‛இந்தியா' கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதைய முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக்ஜன சக்தி (ராம்விலாஸ்), முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சியின் எச்ஏஎம் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகள் உள்ளன.
மறுபுறம் எதிர்க்கட்சிகள் ‛மகாகத்பந்தன்' என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடிஎனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் லிபரேஷன் - சிபிஐஎம்எல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிசோரின் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்கள், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications