பீகார் தேர்தல்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் நிதிஷ்குமார்! யார் யாருக்கு வாய்ப்பு?
பாட்னா: பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெளியிட்டிருக்கிறது. 57 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை நிதிஷ்குமார் வெளியிட்டிருக்கிறார். இந்த பட்டியலில் 4 பெண்களின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன.
இப்பட்டியல் படி, மகாநார் தொகுதியில் கட்சியின் மாநிலத் தலைவர் உமேஷ் குஷ்வாஹா, நாளந்தாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்ரவண் குமார், மற்றும் போரே (தனி) தொகுதிக்கு சுனில் குமார் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் பல முக்கிய வேட்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக, பாரதிய ஜனதா கட்சி தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கான 71 வேட்பாளர்களை கொண்ட பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது. சீவானுவில் மங்கள் பாண்டே, கடிஹாரில் தர்கிஷோர் பிரசாத், தானாபூரில் ராம்கிரிபால் யாதவ், பாங்கிப்பூரில் நிதின் நவீன், பெட்டியாவில் ரேணு தேவி, கயா நகரத்தில் பிரேம் குமார், ஜாமுய்வில் ஷிரேயாசி சிங், லட்சுமணசாய் தொகுதியில் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா, தாராபூர் தொகுதியில் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரியும் போட்டியிடுவார்கள் என்று பாஜக மத்திய தேர்தல் குழு அறிவித்திருந்தது.
தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் திங்கட்கிழமை தனது கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்திருந்தார். இதில் 65 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications