ஜனதா பரிவாரை போல்.. வரலாற்றை கிளறி பாஜகவை எச்சரித்த சரத் பவார்! அப்போ என்ன நடந்தது?
பாட்னா: ஜனதா பரிவால் போல் எங்களின் ஐக்கிய முன்னணி கூட்டணியையும் மக்கள் ஆசீர்வதிப்பார்கள் என பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு வரலாற்றை கிளறி பாஜகவுக்கு சரத் பவார் எச்சரிக்கை செய்தார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசுக்கு எதிராக வியூகம் வகுக்கும் வகையில் இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமை வகித்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்பட 16 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 4 மணிநேரத்துக்கும் அதிகமாக நடந்து முடிந்தது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர்களின் 2வது ஆலோசனை கூட்டம் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடக்க இருக்கிறது.
இந்நிலையில் தான் இன்றைய ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தலைவர்கள் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த வேளையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, ‛‛இது ஜனதா பரிவார் இயக்கம் போல் எங்களின் ஐக்கிய முன்னணி கூட்டணிக்கும் மக்கள் மத்தியில் ஆசீர்வாதம் கிடைக்கும்'' என நம்பிக்கை தெரிவித்தார்.
ஜனதா பரிவாரில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் உள்பட பல கட்சிகள் ஜனதா கட்சியில் இருந்து பிரிந்தாலும் தற்போது பல மாநிலங்களில் பலமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியும் பலமாக அமையும் என ஒற்றை வரியில் சரத்பவார் குறிப்பிட்டு பாஜகவை எச்சரித்துள்ளார்.
இதையடுத்து பிடிபி கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி கூறுகையில், ‛‛காந்தியின் இந்தியாவை கோட்சேவின் நடாக மாற்ற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க விடமாட்டோம்'' எனக்கூறி பாஜகவுக்கு எதிராகவும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் பேசியுள்ளார்.
இதுபற்றி என்சி கட்சியின் தலைவரான ஓமர் அப்துல்லா கூறும்போது, ‛‛காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 17 கட்சிகள் அதிகாரத்துக்காக ஒன்றிணையாமல் கொள்கைக்காக இணைந்துள்ளன. நாட்டை அழிவில் இருந்து காக்கவும், ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் நாங்கள் கூடி ஆலோசனை செய்தோம்.
நானும் மெகபூபா முப்தியும் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு வரும் பகுதியை(காஷ்மீர்) சேர்ந்தவர்கள். நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஜனநாயகம் பற்றி விவாதங்கள் நடந்தன. ஆனால் இந்த ஜனநாயகம் ஏன் இன்னும் ஜம்மு காஷ்மீரை அடையவில்லை'' எனக்கூறி பாஜகவை சாடினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications