சோறு போடலை.. 3 மாசமா சித்ரவதை.. எல்லாத்துக்கும் என் நாத்தனார்தான் காரணம்.. லாலு மருமகள் ஆவேசம்
நாத்தனார் மீது லாலு பிரசாத் மருமகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்
Recommended Video
பாட்னா: "எல்லாத்துக்கும் காரணம் என் நாத்தனார்தான்.. 3 மாசமா என்னை கொடுமைப்படுத்தறார்.. சோறு கூட எனக்கு போடுவதில்லை" என்று லாலு பிரசாத் மருமகள் ஐஸ்வர்யா பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத். இவரது மூத்த மகன் தேஜ் பிரதாப்புக்கும், ராஷ்டிரிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ சந்திரகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் போன வருடம் மே மாதம் கல்யாணம் நடந்தது.
தம்பதிக்குள் தகராறு அடிக்கடி வந்துவிட்டது.. இதற்கு ஐஸ்வர்யா சொன்ன காரணம், தன் கணவர் போதைக்கு அடிமையானவர் என்பதுதான். அது மட்டுமில்லை.. அடிக்கடி தன்னை சிவனின் அவதாரம் என்று சொல்லி கொள்வாராம்.

சமாதானம்
இவர்களுக்குள் தகராறு அதிகமாக, கல்யாணம் ஆன 6 மாசத்திலேயே டைவர்ஸ் கேட்டு கோர்ட் வாசலையும் தேஜ் பிரதாப் மிதிக்க நேர்ந்தது. எனினும் 2 பேரையும் சமாதானம் செய்து ஒன்றாக வாழ வைக்க இரு வீட்டு பெரியவர்களும் முயற்சி மேற்கொண்டனர்.

கண்ணீர்
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, மருமகள் ஐஸ்வர்யா ராய், அழுதுகொண்டே லாலு வீட்டில் இருந்து வெளியேறும் போட்டோ ஒன்று வெளியானது. அதில் ஐஸ்வர்யா கையில் சூட்கேஸ் உள்ளது. கதறி அழுதபடியும், துப்பட்டாவில் கண்ணீரை துடைத்தபடியும் வெளியே வருகிறார். லாலு வீட்டில் இவருக்கு என்னாச்சோ என்ற சந்தேகமும் எழுந்தது.

பேட்டி
இந்நிலையில், ஐஸ்வர்யா, இது எல்லாத்துக்கும் காரணம் தன் நாத்தனார்தான் என்று ஒரே போடாக போட்டுள்ளார். பாட்னா செய்தியாளர்களிடம் பிரச்சனையை ஐஸ்வர்யா எடுத்து சொன்னார். அப்போது, "எனக்கும், என் கணவருக்கும் நடுவில் உள்ளே புகுந்து பிரச்சனை ஏற்படுத்தியவர் என் நாத்தனார் மிசா பாரதிதான். இவர்தான் எங்க ரெண்டு பேருக்கும் நடுவில் விரிசல் பெரிதாக்கியவர்.

சாப்பாடு தரல
என் கணவர் டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போன பின்னாடிகூட, நான் என் மாமியார் வீட்டில்தான் இன்னமும் இருக்கிறேன். இந்த வழக்கு இன்னமும் நிலுவையில்தான்கோர்ட்டில் இருக்கிறது. ஆனால், நாங்க ரெண்டு பேரும் டைவர்ஸ் செய்துவிட்டது போல, மிசா பாரதி என்னை நடத்துகிறார். 3 மாசமாக என்னை அவர் கொடுமைப்படுத்தறார்... சாப்பாடு கூட தருவது இல்லை" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்!
ஏற்கனவே தள்ளாமை, நோய், கொசுக்கடி.. என ஜெயிலில் புரண்டு வரும் லாலுவுக்கு, மகள் - மருமகள் பஞ்சாயத்து பெரிய தலைவலியாக உருவெடுத்து உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications