பீகாரில் பாஜக வெற்றி பெறுவது ஈசி இல்லை! நிதிஷை இழுத்தும் தடுமாறும் நிலை! காத்திருக்கும் ஆசிட் டெஸ்ட்
பாட்னா: நிதிஷ் குமார் பாஜக பக்கம் திரும்பியிருப்பதால், பீகாரில் பாஜக மேலும் பலமடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக நடத்திய சர்வேயில், பீகாரில் அக்கட்சிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சில விவரங்கள் கிடைத்தன. அது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
பாஜகவிற்கு எப்போதும் வடக்கில் பலம் என்றும், தெற்கில் தான் பாஜக தடுமாறும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. குறிப்பாக உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் பாஜக எளிதில் வென்றுவிடும் என்பதே இவர்களது வாதமாக இருக்கிறது. இதுபோக, இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்த நிதிஷ் குமார் பாஜக பக்கம் திரும்பியிருக்கிறார்.

இதனால் பீகாரில் பாஜக மேலும் பலமடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதிஷ்குமாரை கூட்டணிக்கு இழுத்து போட்டாலும் பாஜகவுக்கு பீகார் ஒன்றும் கேக்வாக் என்று சொல்லும் அளவுக்கு எளிதான களமாக இல்லை. பாஜக கடுமையான சவாலையே இந்தியா கூட்டணி கட்சிகளிடம் இருந்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அரசியல் விமர்சர்கள் கூறுகிறார்கள். பாஜகவிற்கு பீகாரில் இருக்கும் சவால்கள் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
முதல் சவால் என்ன?: பீகாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 53 சதவிகித வாக்குகளை பெற்றது. ஆனால், நிதிஷ் குமார் ஆட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி, அடிக்கடி அணி மாறும் அவரது நிலைப்பாடு ஆகியவற்றால் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்தது. இது தேசிய ஜனநாயக கூட்டணி முன்பாக இருக்கும் முதல் சவால்..
2வது சவால்: இது மட்டும் இன்றி 2024 தேர்தலில் ராம்விலாஸ் பாஸ்வான் இல்லாதது பாஜக கூட்டணிக்கு மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது. ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானுக்கு ராம் விலாஸ் பாஸ்வான் அளவிற்கு செல்வாக்கு இல்லை.
சிராக் பாஸ்வானின் சித்தப்பா பசுபதி குமார் பராஸும் எந்த வகையிலும் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு ஈடாகவில்லை. மூன்றாவதாக சிபிஐ-எம் எல், சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளும் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து இருப்பது எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வலு சேர்த்துள்ளது.
3வது சவால்: 2019 தேர்தலில் காங்கிரஸ் ஆர்ஜேடி கூட்டணியில் இடது சாரிகள் இல்லை. ஆனால் இந்த முறை இடதுசாரிகள் அங்கம் வகிப்பது இந்தியா கூட்டணிக்கு பெரிய பூஸ்ட் ஆக உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாமலே 39 சதவிகித வாக்குகளை எதிர்க்கட்சிகள் பெற்று இருந்தன.
4 வது சவால்: நான்காவதாக, தேஜஸ்வி யாதவின் இமேஜ் முன்பைவிட பீகாரில் பலமடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஒராண்டு காலமாக தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக இருந்தது அவரது செல்வாக்கை பீகார் வாக்காளர்கள் மத்தியில் பெருமளவில் உயர்த்தி விட்டுள்ளது. 2020ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தனிமனிதராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக வெல்ல காரணமாக இருந்தார்.
பாஜகவுக்கு கடினம் தான்: இளைஞர்கள் மத்தியில் தேஜஸ்வி யாதவிற்கு ஆதரவு பெருகியுள்ளது. இந்த ஆண்டு 17 ஆண்டு கால நிதிஷ் ஆட்சி vs 17 மாத ஆட்சி என்ற கோஷத்துடன் பிரசாரத்தை தேஜஸ்வி யாதவ் முன்னெடுத்துள்ளார். இது வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, நிதிஷை மீண்டும் கூட்டணிக்குள் இழுத்தாலும் பாஜகவிற்கு வரும் லோக்சபா தேர்தல் களம் அவ்வளவு எளிதாக இருக்காது. கடுமையான சவாலை மோடி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பீகாரில் தொகுதி பங்கீடு கையெழுத்து: பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளிலும், பாஜக 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பீகாரை பொறுத்தவரை நிதிஷ் குமார் அண்மையில் தான் பாஜக கூட்டணிக்கு திரும்பினார். இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த நிதிஷ் குமார், கூட்டணியை விட்டு வெளியேறி ஷாக் கொடுத்தார். அதேவேகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பீகார் முதல்வராக பதவியேற்றார். பாஜகவிடமே மீண்டும் நிதிஷ் சரண்டர் ஆனதால், இந்த முறை தொகுதி பங்கீட்டில் பாஜக கறார் காட்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். அதேபோல ஐக்கிய ஜனதா தளம் கட்சியை விட ஒரு இடத்தில் கூடுதலாக பாஜக போட்டியிட்டுள்ளது.
கடந்த தேர்தலில் எப்படி?: கடந்த 2019- லோக்சபா தேர்தலில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தலா 17 தொகுதிகளில் போட்டியிட்டன. லோக் ஜனசக்தி 6 தொகுதிகளில் போட்டியிருந்தது. பாஜக கூட்டணி கடந்த தேர்தலில் 39 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்று இருந்தது.
தொகுதி பங்கீட்டில் மும்முரம்: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆளும் பாஜக மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக வேட்பாளர் பட்டியலை வெளியிட துவங்கியுள்ளன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இரண்டு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications