பிராமணர்களுக்கு வாய்ப்பு குறைப்பு.. நிதிஷ் குமார் அமைச்சரவையில் எந்தெந்த ஜாதிக்கு எத்தனை இடங்கள்?
பாட்னா: பீகாரின் புதிய முதல்வராக இன்று 10 வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றார். அவருடன் 26 அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர். இந்நிலையில் தான் பீகாரில் எந்தெந்த ஜாதியினருக்கு அதிக அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. இதில் பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்ப குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் உயர்ஜாதியினராக கூறப்படும் பிரிவில் 8 பேருக்கு சான்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
பீகார் சட்ட சபைதேர்தலில் பாஜக -ஜேடியூ தலைமையிலான என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து பீகாரின் புதிய முதல்வராக இன்று ஜேடியூ கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்று கொண்டார். அவர் பீகார் முதல்வராக 10வது முறையாக இன்று பதவியேற்றார்.

பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடந்த விழாவில் நிதிஷ் குமாருக்கு, பீகார் ஆளுநர் முகமது ஆரிப் கான் பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்பட பல பாஜக தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
27 பேர் பதவியேற்பு
இந்த பதவியேற்பு விழாவில் நிதிஷ் குமாருடன் 26 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். நிதிஷ் குமாரை சேர்த்தால் மொத்தம் 27 பேர் பதவியேற்றுள்ளனர். கட்சி வாரியாக பார்த்தால் பாஜகவின் 15 பேர், ஜேடியூவின் 8 பேர், சிராக் பஸ்வானின் எல்ஜேபி (ராம் விலாஸ்) கட்சியின் 2 பேர், ஜிதன் ராம் மஞ்சியின் எச்ஏஎம் மற்றும் ஆர்எல்எம் கட்சியின் தலா ஒருவர் என மொத்தம் 27 பேர் பதவியேற்றனர்.
உயர் ஜாதியினர் எத்தனை பேர்?
இதில் உயர்ஜாதியினர் 8 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர் ஜாதியினர் பாஜகவின் ஓட்டு வங்கியாக உள்ள நிலையில் அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது..
அதன்படி துணை முதல்வராக இருக்கும் பாஜகவின் விஜயகுமார் சின்ஹா (ஜாதி - பூமிகார்)
* மங்கல் பாண்டே (பிராமணர்),
* சஞ்சய் சிங் டைகர் (ராஜ்புத்),
* ஸ்ரேயாஸி சிங் (ராஜ்புத்),
* நிதின் நவின் (கயாஸ்தா) என 5 உயர்ஜாதியினருக்கு பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது.
ஜேடியூவை எடுத்து கொண்டால் விஜய் குமார் சவுத்ரி (பூமிகார்),
* லெஸ்ஸி சிங் (ராஜ்புத்),
* சிராக் பஸ்வானின் எல்ஜேபி (ராம் விலாஸ்) கட்சியை சேர்ந்த சஞ்சய் குமார் சிங் (ராஜ்புத்) உள்ளிட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் என்டிஏ அரசில் 8 உயர்ஜாதியினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை பாஜகவில் பிராமணர்களில் மங்கல் பாண்டே மற்றும் நிதிஷ் மிஸ்ரா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை மங்கல் பாண்டேவுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் உயர்ஜாதியினர் 8 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த சமுதாய மக்களின் ஓட்டு வங்கியை தக்க வைக்க பாஜக - ஜேடியூ கூட்டணி முயற்சிக்கிறது.
ஓபிசி - இபிசி பிரிவினர்
இதற்கு அடுத்தப்படியாக ஓபிசி, இபிசி மற்றும் வைசியா பிரிவை சேர்ந்த தலைவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் மீண்டும் பாஜக கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வர மிக முக்கிய காரணமாகும். மேலும் நிதிஷ் குமாரும் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர் தான். இதனால் இந்த சமுதாயத்தை சேர்ந்த 13 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாஜகவை எடுத்து கொண்டால் ஒபிசி - இபிசி - வைசியா சமுதாயத்தை சேர்ந்த 8 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
* அதன்படி துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி (கோரி),
* ராம்கிருபால் யாதவ் (யாதவ்),
* சுரேந்திரா மேக்தா (தானுக்),
* டாக்டர் பிரமோத் குமார் சந்திரவன்ஷி (காஹர்),
* நாராயணன் பிரசாத் (டெலி)
* ராமநிசாத் (மல்லா)
* டாக்டர் திலிப் ஜெய்ஸ்வால் (வைசியா)
* அருண் குமார் பிரசாத் (வைசியா) உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜேடியூவை எடுத்து கொண்டால் ஓபிசி - இபிசி பிரிவில் 4 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
* முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் குர்மி சமுதாயத்தை சேர்ந்தவர்.
* அதேபோல் ஷ்ரவண் குமார் (குர்மி)
*விஜயேந்திர யாதவ் (யாதவ்),
* மதன் ஷானி (நிசாத்) உள்ளிட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
* ஆர்எல்எம் கட்சியை எடுத்து கொண்டால் அதன் தலைவர் உபேந்திர குஷ்வாஹாவின் மகன் தீபக் பிரகாஷ் குஷ்வாகாவிற்கு(கோரி) வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தலித் சமுதாயத்தினர்
தலித் சமுதாயத்தினரை எடுத்து கொண்டால் 5 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
* பாஜகவில் லகேந்திர பஸ்வான் (துசாத்)
* சுனில் குமார் (ரவிதாசி) என 2 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
* ஜேடியூ கட்சியை எடுத்து கொண்டால் அந்த கட்சியின் தலித் தலைவராக முன்னிறுத்தப்படும் அசோக் சவுத்ரி (புஷாஹர்),
* சிராக் பஸ்வானின் கட்சியை எடுத்து கொண்டால் சஞ்சய் பஸ்வான் (பஸ்வான்),
* எச்ஏஎம் கட்சியை எடுத்து கொண்டால் அதன் தலைவராக இருக்கும் மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் மகன் சந்தோஷ் சுமன் (பசி) என மொத்தம் 5 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் இஸ்லாமியர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜேடியூ கட்சியை சேர்ந்த ஜமா கான் என்பவருக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். பாஜகவில் இஸ்லாமியர்கள் யாருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் பீகாரை எடுத்து கொண்டால் முதல்வருடன் சேர்த்து மொத்தம் 36 பேர் அமைச்சரவையில் இடம்பெறலாம். தற்போது முதல்வராக நிதிஷ் குமாரும், 26 பேர் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர். இன்னும் 9 இடங்கள் காலியாக உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி












Click it and Unblock the Notifications