பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாலு வீட்டு இப்தார் விருந்தில் நிதிஷ்குமார்.. பாஜகவுக்கு ஸ்டிராங் மெசேஜ்!.. மீண்டும் மகா கூட்டணி?

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் தேஜஸ்வி ஏற்பாடு செய்திருந்த இப்தார் நோன்பில் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்றது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் மகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. எனினும் இந்த ஆட்சி நிலைக்கவில்லை. பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகி 5 ஆண்டு ஆட்சி காலத்தை வெற்றிகரமாக முடித்தார்.

இந்த நிலையில் பல்வேறு விவகாரங்களில் பாஜகவுக்கும் ஜேடியுவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு கொரோனாவுக்கு மத்தியில் நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் ஜேடியு கூட்டணி வைத்தது. அப்போதும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் ஜேடியூவை பாஜக குறைத்து மதிப்பிட்டு அவமானப்படுத்தி வந்தது. இந்த தேர்தலில் பாஜக 74 இடங்களிலும் ஜேடியூ 43 இடங்களிலும் ஆர்ஜேடி 75 இடங்களிலும் காங்கிரஸ் 19 இடங்களிலும் வென்றது. ஜேடியுவை விட பாஜக கூடுதல் இடங்களை பெற்றாலும் கூட்டணி தர்மத்தை முன்னிட்டு முதல்வராக நிதிஷை ஏற்பதாக சொன்னார்கள். இதையடுத்து நிதிஷ் முதல்வராக்கப்பட்டார். துணை முதல்வர் பதவி பாஜகவுக்கு வழங்கப்பட்டது.

ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் நிறுவனர் அஜித்சிங் கொரோனாவால் காலமானார் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் நிறுவனர் அஜித்சிங் கொரோனாவால் காலமானார்

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்

இந்த நிலையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது ஜேடியு கட்சியினருக்கு அதிக இடங்களில் வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. ஆனால் பாஜக அவ்வாறு வழங்கவில்லை. இதனால் எங்களுக்கு மத்திய அமைச்சர் பதவியே வேண்டாம் என்றார் நிதிஷ். இதுவும் பாஜக - ஜேடியு கூட்டணிக்குள் மீண்டும் விரிசல் ஏற்பட காரணமாயிற்று. அருணாச்சல பிரதேசத்தில் 7 ஜேடியூ எம்எல்ஏக்களில் 6 பேரை பாஜக தங்கள் வசமாக்கிக் கொண்டன. இது போல் ஒவ்வொரு இடங்களிலும் ஜேடியுவுக்கு பாஜக தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்தது. ஜேடியு வலிமையான மாநில கட்சியாக இருக்கும் போதிலும் அந்த கட்சியை குறைத்து மதிப்பிட்டு பேசுவதையே பாஜக தலைவர்கள் வாடிக்கையாக கொண்டனர். இதனால் நாளுக்கு நாள் பாஜக- ஜேடியு இடையே கருத்து வேறுபாடுகள் விஸ்வரூபம் எடுத்து வந்தன.

பாஜகவுக்கு எதிரான கூட்டணி

பாஜகவுக்கு எதிரான கூட்டணி

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான ஒரு பிரதமர் வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்காக மாநில கட்சிகளில் வலிமையாக உள்ள ஜேடியுவை சுற்றி வளைக்க திட்டமிட்டுள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து ஜேடியு வெளியே இழுப்பதற்கான ஆயத்த பணிகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தீனி போடும் வகையில் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஜேடியுவுக்கு அதிக சீட்டுகளை ஒதுக்கக் கூடாது என்பதற்காகவே அக்கட்சியை பாஜக சிறுமைப்படுத்தி வருகிறது. மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு போட்டி வேட்பாளராக ஒருவரை நிறுத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எனவே நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளராகவோ இல்லை ஜனாதிபதி வேட்பாளராகவோ நிறுத்தப்படலாம் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.

பீகாரில் லாலு இப்தார் விருந்து

பீகாரில் லாலு இப்தார் விருந்து

இந்த நிலையில் பீகாரின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் நடத்திய இப்தார் விருந்தில் கலந்து கொள்ளுமாறு முதல்வர் நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதே வேளையில் டோரண்டா முறைகேடு வழக்கிலிருந்து லாலு பிரசாத் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனால் நிதிஷ் இந்த நிகழ்வில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.

ராப்ரி தேவி வீட்டில் இப்தார் விருந்து

ராப்ரி தேவி வீட்டில் இப்தார் விருந்து

முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி வீட்டில் நேற்று நடந்த இப்தார் விருந்தில் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். அவரை லாலு உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். லாலுவின் அழைப்பை ஏற்று இப்தார் விருந்தில் நிதிஷ் கலந்து கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வலுவான மெசேஜ்

வலுவான மெசேஜ்

அதாவது நிதிஷ் விருந்தில் பங்கேற்றது மூலம் பாஜகவுக்கு வலுவான ஒரு கருத்தையும் சொல்லியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அரசியல் நிபுணர்கள் கூறுகையில் மகாபந்தன் கூட்டணியிலிருந்து விலகிய பிறகு நிதிஷ், லாலு நடத்திய விருந்தில் கலந்து கொண்டுள்ளார். இதன் மூலம் நிதிஷ் பாஜகவுக்கு ஒரு ஸ்டிராங் மெசேஜை சொல்லியுள்ளார்.

நிதிஷின் செல்வாக்கு

நிதிஷின் செல்வாக்கு

அதாவது பாஜக அதன் வழியில் செல்ல வேண்டும் அல்லது தனக்கு இருக்கவே இருக்கு வேறொரு வழி!. நிதிஷின் செல்வாக்கால் எங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என பாஜக மூத்த தலைவர்கள் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தனர். இதற்கு அடுத்த நாளே லாலு வீட்டில் இப்தார் விருந்தில் நிதிஷ்குமார் கலந்து கொண்டுள்ளார். அதாவது பாஜக அதன் வழியில் செல்ல வேண்டும் அல்லது தனக்கு இருக்கவே இரு வேறொரு வழி!. நிதிஷின் செல்வாக்கால் எங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என பாஜக மூத்த தலைவர்கள் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தனர். இதற்கு அடுத்த நாளே லாலு வீட்டில் இப்தார் விருந்தில் நிதிஷ்குமார் கலந்து கொண்டுள்ளார்.

 மீண்டும் மகா கூட்டணியா

மீண்டும் மகா கூட்டணியா

அது போல் இப்தார் விருந்துக்கு முன் தினம் பீகாரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா சென்றார். எனவே இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும், 2025 ஆம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலிலும் பாஜக கூட்டணியிலிருந்து விலகி மீண்டும் மகா கூட்டணி அமைத்து அதில் லாலுவும் நிதிஷும் இணைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அது போல் இப்தார் விருந்துக்கு முன் தினம் பீகாரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா சென்றார். எனவே இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும், 2025 ஆம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலிலும் பாஜக கூட்டணியிலிருந்து விலகி மீண்டும் மகா கூட்டணி அமைத்து அதில் லாலுவும் நிதிஷும் இணைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Bihar CM Nithish Kumar attended Iftar party arranged by Lalu family gives a strong message to BJP?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X