Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கைமாறிய " மனைவிகள்.. கைமீறிய கணவன்கள்..அவர் மனைவி + இவர் கணவன்.. தலையே சுத்துது.. அடடே பழிக்குப்பழி

மனைவியின் கள்ளக்காதலனை பழிவாங்குவதற்காக, வித்தியாசமான காரியத்தை செய்துள்ளார் நபர் ஒருவர்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பொதுவாக கள்ளக்காதல் சமாச்சாரங்கள், வெட்டுகுத்து, கொலை வரை சென்று முடியும்.. ஆனால், ஒரு கள்ளக்காதல் கல்யாணம்வரை சென்றுள்ளது வியப்பை தந்து வருகிறது.. இப்படி ஒரு பழிக்குப்பழியா? என்று வாயை பிளக்கிறார்கள் நெட்டிசன்கள்.

பீகாரில் ககாரியா மாவட்டத்தில் உள்ளது ஹர்தியா என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் நீரஜ்... இவருக்கு 2009-ல் திருமணம் ஆனது.. மனைவி பெயர் ரூபி தேவி.. இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கிறார்கள்.

மிகவும் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.. இதனால் பூரித்துகிடந்தார் நீரஜ்.. ஆனால், அப்போதுதான், ரூபிக்கு ஒரு கள்ளக்காதலன் இருப்பது தெரியவந்தது..

தினக்கூலி

தினக்கூலி

இதைக் கேள்விப்பட்டதுமே, தலையில் இடியே விழுந்துவிட்டதுபோல அதிர்ந்துபோனார் நீரஜ்.. அந்த கள்ளக்காதலன் பெயர் முகேஷ்.. பஸ்ராஹா கிராமத்தில் வசித்து வருகிறாராம். தினக்கூலியாக ஒரு இடத்தில் வேலை பார்த்து வருகிறார் முகேஷ்.. எப்படியோ அவருடன் ரூபிக்கு பழக்கமாகிவிட்டது.. அதற்கு பிறகு அவர்களின் கள்ளக்காதல் பலமாக வளர்ந்துள்ளது.. ஆனாலும், முகேஷை தன்னுடைய மனைவி எப்படி, எங்கு சந்தித்திருக்க கூடும்? இந்த அளவுக்கு கள்ளக்காதல் வளர்ந்துவர காரணம் என்று ஆராய்ந்தார் நீரஜ்.. அப்போதுதான் அடுத்த அதிர்ச்சி முகேஷ் தலையில் விழுந்தது.

பத்திக்கிச்சே

பத்திக்கிச்சே

கல்யாணத்துக்கு முன்பே, பஸ்ராஹா கிராமத்தில் வசித்தபோது, முகேஷூடன் தொடர்பில் இருந்திருக்கிறார் ரூபி.. அந்த முகேஷுக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது.. அவருக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. எனினும், கல்யாணத்துக்கு முன்பிருந்தே ரூபி அவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.. ரூபிக்கு கல்யாணம் ஆகி 4 பிள்ளைகள் பிறந்தும்கூட முகேஷூடன் உறவு நீண்டுள்ளதை அறிந்து அதிர்ந்து போனார் நீரஜ்.. இதனால் என்ன செய்வதென்றே புரியாமல் குழம்பி நின்றநேரத்தில்தான், நீரஜ் தலையில் இன்னொரு இடி வந்து டமால் என விழுந்தது. முகேஷூம், ரூபியும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்களாம்..

 நீரஜ் ப்ளான்

நீரஜ் ப்ளான்

இந்த விஷயம் தன்னுடைய கணவனுக்கு தெரிந்துவிட்டது என்று அறிந்ததுமே, ரூபி அலர்ட் ஆனார். உடனே தன்னுடைய 4 பிள்ளைகளில், 3 பிள்ளைகளை மட்டும் அழைத்துக்கொண்டு, கிராமத்தில் இருந்து தப்பி வேறிடத்துக்கு சென்றுவிட்டார்.. வீட்டில் மனைவியை காணோம் என்றதும், நீரஜ்ஜூக்கு தலையே சுத்திவிட்டது.. இதனால், அதிர்ச்சியடைந்த நீரஜ், பஸ்ராஹா போலீசில் புகார் தந்தார்.. அதில், 'இந்த விவகாரத்தில் தீர்வு ஏற்பட கிராம பஞ்சாயத்து நடத்தப்பட்டது. ஆனால், முகேஷ் அதற்கு ஒப்பு கொள்ளாமல் தப்பி வாழ்ந்து வருகிறார்' என தெரிவித்து உள்ளார்.

 மனசே ஆறல

மனசே ஆறல

ரூபி - முகேஷ் மீது புகாரை தந்தாலும், நீரஜ்ஜுக்கு மனசே ஆறவில்லை.. இப்படி துரோகம் செய்துவிட்டு, கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டாரே மனைவி என்று அதிர்ச்சி விலகாமல் இருந்தார்.. உடனே, முகேஷை பழிவாங்க முடிவு செய்தார்.. அதற்காக, முகேஷை தீர்த்துக்கட்ட நினைக்கவில்லை.. மனைவியுடனான கள்ளஉறவு குறித்தும் கேள்வியும் கேட்கவில்லை.. போலீசுக்கும் போகவில்லை.. மாறாக, முகேஷ் வீட்டுக்கு கிளம்பி போனார்.. முகேஷ் மனைவியுடன் அறிமுகம் செய்து கொண்டார்..

 திக்குமுக்காடினார்

திக்குமுக்காடினார்

அந்த பெண்ணின் பெயரும் ரூபி என்பதை அறிந்து நீரஜ் திக்குமுக்காடிப்போனார்.. எனினும், பழிக்குப் பழி வாங்கியாக வேண்டும் என்பதால், முகேஷின் மனைவியுடன் நெருங்கி பழக நினைத்தார்.. இந்த ஒரு விஷயத்துக்காகவே, முகேஷின் ஆம்னி கிராமத்திலேயே நீரஜ் வசிக்க ஆரம்பித்தார்.. நாளடைவில், நீரஜ்ஜூக்கும், முகேஷின் ரூபிக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுவிட்டது.. ஒருகட்டத்தில் கல்யாணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர்.. அதன்படியே, 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்ளூர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

 ரூபி + ரூபி

ரூபி + ரூபி

நீரஜ்ஜின் 4 குழந்தைகளில், 3 குழந்தைகளை ஏற்கனவே ரூபி தன்னுடன் அழைத்து சென்றுவிட்டதால், ஒரு குழந்தை மட்டும் நீரஜ்ஜிடம் இப்போது உள்ளது.. அந்தவகையில், இந்த ஒரு குழந்தை + முகேஷின் 2 குழந்தைகள் என மொத்தம் 3 குழந்தைகளை நீரஜ்ஜூம், புது மனைவி ரூபியும் சேர்ந்து வளர்த்து வருகிறார்கள்.. அதேபோல, முகேஷ் + ரூபி = இருவரும் 3 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.. மனைவியால் கைவிடப்பட்ட நிலையில், பழிக்கு பழி வாங்கும் வகையில், மனைவியின் கள்ளக்காதலரான முகேஷின் மனைவியை திருமணம் செய்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திடீர் சேஞ்ச்

திடீர் சேஞ்ச்

அதாவது, மனைவியின் கள்ளக்காதலை நீரஜ் கண்டுபிடித்தபிறகு, ஊர் பஞ்சாயத்திடம்தான் முதலில் பிரச்சனையை கொண்டுபோனாராம்.. அவர்களும் ரூபியை கண்டித்துள்ளனர்.. ஊருக்கு நடுவில் தன் கள்ளக்காதலை சொல்லி கணவன் அவமானப்படுத்திவிட்டாரே என்பதால்தான், நீரஜூக்கு ஷாக் தர முடிவு செய்து, முகேஷை அழைத்துக் கொண்டு கல்யாணமே செய்ய துணிந்தாராம் ரூபி.. ஆனால் நீரஜ்ஜோ, மனைவிக்கும், முகேஷுக்கும் சேர்த்து ஷாக் தர வேண்டும் என்பதால்தான், முகேஷ் மனைவியை கல்யாணம் செய்வதற்காகவே அந்த கிராமத்தில் வீடு எடுத்து, கல்யாணமும் செய்து பழிவாங்கினாராம்.. ஆக, ஆளுக்கு ஒரு பக்க கள்ளக்காதல் ஜோடிகள், சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+