அதகளமான பீகார் அரசியல்.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ்குமார்? வெளியான ஷாக் தகவல்கள்
பாட்னா: பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்ப நிதிஷ்குமார் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இன்று அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று சொல்லப்படுகிறது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்ந்த, எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. அதுவரை காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வந்த ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டணியில் இணைவதாக அறிவித்தது. கூட்டணியில் கட்சிகளை ஒருங்கிணைக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பெரும் பங்காற்றினர். ஆனால், தற்போது பாஜகவுடன் கைகோர்க்க நிதிஷ்குமார் தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 242 தொகுதிகளில் கடந்த சட்டமன்ற தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 79 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 45 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 19 வென்றது. அதேபோல பாஜக 78 இடங்களில் வென்றது. அதாவது ஆட்சி அமைக்க தேவையான 122 இடங்களை யாரும் வெல்லவில்லை. எனவே பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்.
ஆனால் இந்த ஆட்சி 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த நிதிஷ்குமார், தனது முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். மட்டுமல்லாது, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சராக தேர்வானார். இந்நிலையில், இந்த கூட்டணிக்கு மத்தியில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதாவது, நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணியை உருவாக்க நிதிஷ் குமார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு அதை சாத்தியமாக்கினார். இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக கூட அவர் நிறுத்தப்படலாம் என்று பேச்சுள் எழுந்தன. இப்படி இருக்கையில்தான் காங்கிரஸின் மல்லிகர்ஜுன கார்கே, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நிதிஷ்குமார் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டுமல்லாது பாஜக-ஐக்கிய ஜனதா தளம் இடையே தொகுத பங்கீடு பேச்சு வார்த்தையும் நடப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இன்று அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பீகார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications