"மயக்கமா வருது" திடீரென பிரச்சாரத்தில் இருந்து கிளம்பிய அமைச்சர் நேரு! மருத்துவமனையில் அனுமதி! பரபர!
பெரம்பலூர்: தனது மகன் அருண் நேருவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அமைச்சர் கே.என்.நேரு, திடீரென தனக்கு மயக்கம் வருவதாக கூறி, பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி மருத்துவமனைக்குச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவுடன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அருண் நேரு, தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். கிராமம் கிராமமாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார் அருண் நேரு.

பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் அருண் நேருவை எதிர்த்து அதிமுக நேரடியாக களமிறங்குகிறது. அதிமுக சார்பில் சந்திரமோகன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். சிட்டிங் எம்.பி பாரிவேந்தர், தாமரை சின்னத்தில் பெரம்பலூரில் போட்டியிடுகிறார். இதனால் களம் உக்கிரமாகத் தகிக்கிறது.
பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் கே.என்.நேரு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இன்று காலை கொசூர் பகுதியில் இருந்து பிரச்சாரம் மேற்கொண்டார் அமைச்சர் நேரு. அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
பிரச்சார வாகனத்தில் நின்றிருந்த அமைச்சர் கே.என்.நேரு, திடீரென, "எனக்கு மயக்கமாக வருகிறது. ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டுச் செல்கிறேன். எனது துறையின் கீழ் வரும் குடிநீர் வாரிய பிரச்சினைகளை இப்பகுதியில் 6 மாதங்களில் கண்டிப்பாக தீர்த்து வைப்பேன்" என்று கூறிவிட்டு உடனடியாக பிரசாரத்தை நிறுத்திக் கொண்டார்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு, பிரசார வாகனத்திலிருந்து கீழே இறங்கி தனது காரில் ஏறி மருத்துவமனைக்கு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. வெயில் கொளுத்தி வரும் நிலையில், பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் நேரு மயக்கம் வருவதுபோல இருப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications