பெரம்பலூர் மணிகண்டனுக்கு என்னாச்சு? சமாதானம் பேச போன ஏட்டு.. நண்பனால் ஆடிப்போன கிராமம்.. பாவம் மீனா
பெரம்பலூர்: பெரம்பலூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஒரு உயிரையே பறித்துவிட்டது. சமாதானம் பேச சென்ற போலீசார் கண் முன்பே நடந்த இந்த கொடூர சம்பவம், மிகப்பெரிய அதிர்வலையை பெரம்பலூரில் ஏற்படுத்திவிட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ளது கைகளத்தூர் கிராமம்.. இங்கு வசித்து வருபவர் மணிகண்டன். 32 வயதாகிறது.. இவர், ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்... இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவருக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்திரத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவரும், அருணுக்கு சொந்தமான இடத்தில் வேலைப் பார்த்து வருகிறார்.. தேவேந்திரனுக்கு 30 வயதாகிறது.. ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த தேவேந்திரனுக்கும், மணிகண்டனுக்கும் சமீபகாலமாகவே இடையே கருத்து வேறுபாடு நிலவி கொண்டிருந்தது.
பொங்கல் விளையாட்டு: இப்படிப்பட்ட சூழலில்தான், கை.களத்தூர் கிராமத்தில் காணும் பொங்கல் பண்டிகையையொட்டி, விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது... இதில் மணிகண்டனும் கலந்து கொண்டார்.. அப்போது, மீண்டும் தேவேந்திரனுடன் தகராறு வெடித்தது.. ஏற்கனவே 2 பேருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், விளையாட்டு போட்டியின்போது மீண்டும் தகராறு செய்து கொண்டார்கள்.
இதனால், தேவேந்திரன் மீது மணிகண்டன், போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் விசாரணைக்கு சென்ற போலீசாரும், தேவேந்திரனை அழைத்து பேசினார்கள். பிறகு, ஏட்டு ஸ்ரீதர், இரு தரப்புக்கும் சமாதானம் செய்ய முயன்றார்.. ஆனால் மணிகண்டன் வயலில் வேலை செய்து கொண்டிருந்ததால், அந்த இடத்திற்கே தேவேந்திரனை அழைத்துச்சென்றுள்ளார்.
அரிவாள் வெட்டு: பைக்கில் வயல்வெளிக்கு வந்த தேவேந்திரன், அதுவரை அமைதியாக இருந்துவிட்டு, பிறகு திடீரென, யாருமே எதிர்பாராத நேரத்தில், ஓடிச்சென்று பைக்கில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, மணிகண்டனின் கழுத்தை சரமாரியாக அறுத்துவிட்டார்.. ஏட்டு ஸ்ரீதர் முன்னிலையிலேயே இந்த கொடுமை நடந்தது..
அரிவாளால் வெட்டுப்பட்ட மணிகண்டன், அங்கேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஏட்டு, தேவேந்திரனை மடக்கி பிடித்து கைது செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றார்.

ஆனால், அதற்குள் இந்த சம்பவம் மிகப்பெரிய பதற்றத்தை அங்கு உண்டுபண்ணிவிட்டது. மணிகண்டன் வெட்டிக் கொல்லப்பட்ட தகவல் ஊருக்குள் பரவி, ஒட்டுமொத்த கிராமத்தினரும், கொலைக்கு உரிய நீதி கேட்டு திரண்டு வந்தார்கள்.. மணிகண்டனின் உடலை, போலீஸ் ஸ்டேஷன் முன்பு வைத்து கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்டோர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தேவேந்திரன்: தேவேந்திரனை கைது செய்துவிட்டோம் என்று போலீசார் சொன்னார்கள். ஆனால் கிராம மக்கள், "தேவேந்திரனை வெளியே விடுங்கள், நாங்கள் பார்த்துக்கறோம்" என்று சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்... அத்துடன், போலீஸ் ஸ்டேஷனின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினார்கள். இதனால், போலீஸ் ஸ்டேஷனே பூட்டப்பட்டது..
நேரம் ஆக ஆக, அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்ததால், தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர். திருச்சி டிஐஜி வருண்குமார், மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா உள்ளிட்டோர் நேரடியாகவே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக வந்த விசிக நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மீனாவுக்கு அரசு வேலை: பிறகு, மணிகண்டனின் மனைவி மீனாவுக்கு அரசு வேலை கிடைக்க வழிவகை செய்வதுடன், மேலும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி தந்தார்கள். அதற்கு பிறகே 7 மணி நேரம் கழித்து போராட்டம் திரும்ப பெறப்பட்டது.
பின்னர், தேவேந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.. அப்போது, தன்னுடைய பெற்றோரை மணிகண்டன் தரக்குறைவாக திட்டிவந்ததால், ஆத்திரம் தாங்காமல் கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் கூறியிருக்கிறார். தொடர் விசாரணை அவரிடம் நடந்து கொண்டிருக்கிறது.
பரபரப்பு: முன்விரோத தகராறு தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தைக்கு போலீஸார் சென்றபோது, அவர்களது கண் முன்னிலையிலேயே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் பெரம்பலூரில் அடங்கவில்லை.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications