அண்ணி பாவம்.. போலீஸை அதிரவைத்த கணவர்.. அந்த நேரத்திலும் மெசேஜ் வேற.. பரலோகம் போன பெரம்பலூர் பிரவீனா
பெரம்பலூர்: பெரம்பலூர் பிரவீனா விவகாரத்தில், கணவர் வசமாக போலீசில் சிக்கியதுடன், பரபரப்பு வாக்குமூலத்தையும் தந்துள்ளார்.
பெரம்பலூர் எளம்பலூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் 33 வயது ராஜ்குமார்.. இவரது மனைவி பிரவீனாவுக்கு 24 வயதாகிறது.. 2 பிள்ளைகள் இருக்கிறார்கள். ராஜ்குமார் பெரம்பலூர் அருகில் ஒரு தனியார் டயர் பேக்டரியில் வேலை பார்த்து வருகிறார்.

ராஜ்குமார்: இந்நிலையில், ராஜ்குமாருக்கும், இன்னொரு பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.. அந்த பெண்ணின் மீதுள்ள மோகத்தினால், மனைவியை விட்டுவிட்டு, 2 முறை வீட்டை விட்டே போய்விட்டார் ராஜ்குமார். எனினும் உறவினர்கள், ராஜ்குமாரை அழைத்து வந்து, அறிவுரை சொல்லி பிரவீனாவுடன் சேர்ந்து வாழ வைத்துள்ளனர். ஆனாலும், கள்ளக்காதலியை கைவிட ராஜ்குமாருக்கு மனமில்லை.
அதனால், கூலிப்படையை வைத்து, பிரவீனாவை கொலை செய்ய முடிவு செய்தர்.. ஆயுதபூஜைக்காக தன் பிள்ளைகளை, பிரவீனாவின் அம்மா வீட்டிற்கு அனுப்பிவைத்துவிட்ட ராஜ்குமார், பிரவீனாவை அவரது உறவினர் வீட்டில் விட்டுவிடுவதாக சொல்லி பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது, ராஜ்குமார் செட்டப் செய்த, 4 பேர், பிரவீனாவை கொன்றுவிட்டு, தப்பிவிட்டார்கள்.. ராஜ்குமாரின் கண்ணெதிரிலேயே பிரவீனா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
நாடகம்: இதற்குபிறகு, ராஜ்குமார், தன் மீது சந்தேகம் யாருக்கும், சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக , தன்னுடைய கையை தானே வெட்டிக்கொண்டு, மர்மநபர்கள் தாக்கியதாக நாடகமாடினார்.. ஆனாலும் போலீசில் வசமாக மாட்டிக் கொண்டார். இதையடுத்து, போலீசாரிடம் ராஜ்குமார் வாக்குமூலம் தந்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் அவர் சொன்னதாவது:
வாக்குமூலம்: "எனக்கும், திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது... நான் அந்த பெண்ணுடன், ஏற்கனவே சென்னை, ஈரோட்டுக்கு சென்று குடும்பம் நடத்தினேன்.. ஆனால், உறவினர்கள் எங்களை பிரித்துவிட்டனர்.. அங்கிருந்து என்னை அழைத்து வந்து மனைவியுடன் சேர்த்து வைத்தனர். இந்த கள்ளக்காதல் காரணமாக, என் மனைவி பிரவீனாவுக்கும், என் அண்ணன் செந்தில்குமார் மனைவி ஆனந்திக்கும் ஒரு முறை பிரச்னை ஏற்பட்டது.
அப்போது என் அண்ணியை, பிரவீனா துடைப்பத்தால் அடித்துவிட்டார்.. அப்போது என்னையும் அடித்தார். அண்ணியையும், என்னையும் தாக்கியதால், பிரவீனாவை கொலை செய்ய முடிவெடுத்தேன். இதற்கு என் உறவினரான ஆனந்தி என்பவர் மூலம் கூலிப்படைக்கு ரூ.2 லட்சம் பேசினேன்.. ஆனந்திக்கு முன்பணமாக ரூ.50,000ஐ அனுப்பினேன்.. திட்டமிட்டபடி, என் மனைவியை பைக்கில் அழைத்து சென்றபோது, 5 கூலிப்படையினர் மனைவியை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டனர்.
கொலுசு நகைகள்: பிறகு, மனைவியின் கழுத்தில் இருந்த செயின், கொலுசு நகைகளை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர். என் மனைவியை விட்டு நான் பிரிந்து வராததால், என் கள்ளக்காதலி என்மீது கோபத்தில் இருந்தார்.. அதனால் என்னுடைய போன்நம்பரை பிளாக் செய்து வைத்திருந்தார். அதனால், என்னுடன் வேலைபார்க்கும் ஒருவரின் செல்போனிலிருந்து, "என்னுடைய மனைவியை கொலை செய்யப்போகிறேன்" என்று மெசேஜ் அனுப்பியிருந்தேன். ஆனால், அந்த எஸ்எம்எஸ்சை அவர் பார்க்கவே இல்லை.
போலீசார் சந்தேகமடைந்து எனது காதலியை அழைத்து விசாரித்தபோது, அவரது செல்போனையும் வாங்கி பார்த்தனர். அப்போது நான் அனுப்பிய மெசேஜ் அதிலிருக்கவும், வசமாக மாட்டிக் கொண்டேன்" என்றார். இந்த வாக்குமூலத்தையடுத்து, ராஜ்குமார், பிரவீனா, கூலிப்படை உள்ளிட்ட 7 பேரையும் போலீசார் கைது செய்து, திருச்சி சிறையில் அடைத்துள்ளனர்..
யாரந்த பெண்: சொந்தக்காரர்கள் பலமுறை அறிவுறுத்தியும் கேட்காமல், 2 முறை மனைவியையும் தவிக்கவிட்டு ஓடிப்போய், இன்று மனைவியையே கூலிப்படை வைத்து கொல்லும் அளவுக்கு ராஜ்குமார் ரிஸ்க் எடுத்திருக்கிறார் என்றால், அப்படிப்பட்ட கள்ளக்காதலி யாராக இருக்கும்???
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications