கையில் தாமரை துண்டு பிரசுரம்! டக்குனு பாஜகவிற்கு பிரச்சாரம் செய்த விஜயபாஸ்கர்! இதென்ன புது குழப்பம்?
புதுக்கோட்டை: அதிமுக மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பாஜக சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறிவிட்டது. கேட்ட இடங்களை அதிமுக கொடுக்கவில்லை என்பதற்காக பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
ஆனால் களத்தில் பாஜக - அதிமுக இடையே பெரிய மோதல் இல்லை. பாஜக இதுவரை அதிமுகவை தாக்கி எங்கும் பிரச்சாரம் செய்யவில்லை.

அண்ணாமலை
முன்னதாக கூட்டணி முறிவு குறித்து பேட்டி அளித்த பாஜக தலைவர் அண்ணாமலை கூட, அதிமுக தலைவர்களை நாங்கள் மதிக்கிறோம். எங்களுக்கு தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளோம். மற்றபடி வேறு மோதல் எதுவும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் கூட்டணியோடு போட்டியிடுவோம் என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.

பிரச்சாரம்
ஆனால் கள அளவில் கீழ் மட்ட நிர்வாகிகள் பலர் இப்போதும் மோதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதிமுக - பாஜக நிர்வாகிகள் இடையே உள்ளூர் அளவில் கடுமையான போட்டி மற்றும் மோதல் நிலவி வருகிறது. அதிமுக தலைமையை பாஜக விமர்சனம் செய்துவிட்டது. இதனால் பாஜக வெற்றிபெற கூடாது என்று உள்ளூர் அளவில் பாஜகவிற்கு எதிராக அதிமுக நிர்வாகிகள் பலர் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்தான் அதிமுக மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பாஜக சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

என்ன நடந்தது
நேற்று புதுக்கோட்டையில் கீரமங்கலம் பேரூராட்சி 10வது மற்றும் 11வது வார்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சாரம் செய்தார். அப்போது அங்கு பாஜக, அதிமுக கொடிகள் ஒன்றாக ஏற்றப்பட்டு இருந்தன. இங்கு 10வது வார்டில் சுமதி, 11வது வார்டில் ராஜாமணி ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்கள். இவர்களின் துண்டு பிரசுரம், கட் அவுட் அனைத்திலும் பாஜக கொடி மட்டுமின்றி அதிமுக கொடியும் சேர்ந்து இடம்பெற்று இருந்தது.

அதிமுக கொடி
இந்த நிலையில்தான் இவர்களை ஆதரித்து ஜீப் ஒன்றில் நின்றபடி விஜயபாஸ்கர் பிரச்சாரம் செய்தார். பாஜகவின் துண்டு பிரசுரம் விஜயபாஸ்கர் கையில் இடம்பெற்று இருந்தது. அதிமுக - பாஜக இடையே கூட்டணி இல்லாத நிலையில் இப்படி விஜயபாஸ்கர் பிரச்சாரம் செய்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதிமுக உள்ளூர் நிர்வாகிகளோ, அதிமுக- பாஜக இடையே கீரமங்கலம் பேரூராட்சியில் மட்டும் கூட்டணி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உடன்படிக்கை
உள்ளூர் அளவில் இங்கு மட்டும் கூட்டணி உள்ளது. இங்கு 15 வார்டில் அதிமுக 9, பாஜக 2 இடங்களை பிரித்து போட்டியிடுகிறது. வேறு இடங்களில் பாஜக நிறுத்தப்படவில்லை. பாஜகவிற்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகளும், அதிமுகவிற்கு ஆதர்வாக் பாஜக நிர்வாகிகளும் வாக்கு கேட்டு வருகிறார்கள். உள்ளூர் அளவில் புரிதல் காரணமாக கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் பாஜகவிற்காக விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்ததில் தவறு இல்லை என்று அதிமுக உள்ளூர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications