பால் குடிங்க.. அப்படியே கொரோனாவிடம் விழிப்புணர்வா இருங்க.. இது புதுச்சேரி மெசேஜ்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பால் பாக்கெட் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வீடு வீடாக சென்று கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.


அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு தகவல்கள், நேரடியாக பொதுமக்களின் இல்லங்களை சென்றடையும் வகையில் அரசு நிறுவனமான பாண்லே வினியோகிக்கும், பால் பாக்கெட்டுகளின் உறையின் மேல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

"இருமல், காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்" "கைகளை அடிக்கடி சோப்பினால் கழுவ வேண்டும்" "முகமூடி அணிய வேண்டும், மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும்" என்கிற வாசகங்கள் அச்சிடப்பட்டு பாண்லே பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.


நாள்தோறும் காலையில் வினியோகிக்கப்படும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரை லிட்டர் பாக்கெட்டுகளிலும், மாலையில் சுமார் 70 ஆயிரம் அரை லிட்டர் பாக்கெட்டுகளிலும் இந்த வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications