விநாயகர் சதுர்த்தி! மின் கட்டண உயர்விலிருந்து 2026ல் காப்பாற்றப்படுவீர்கள்! புயலை கிளப்பிய காங்கிரஸ்
புதுவை: புதுவை மின் உயர்விலிருந்து 2026 ஆம் ஆண்டு காப்பாற்றப்படுவீர்கள் என அறிவிப்புடன் விநாயகர் சதுர்த்தி விழாவை காங்கிரஸ் கட்சியினர் நூதனமாக முறையில் கொண்டாடியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவையில் நேற்றைய தினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. முத்தியால்பேட்டை பகுதியில் பெரிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து காங்கிரஸ் ஆதரவாளர்கள் சார்பில் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் நூதனமாக விநாயகர் அருள் பாவிக்கும் வகையில் மின் கட்டண உயர்வை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, "பக்தர்களே கவலை வேண்டாம்- மின்சார கட்டண உயர்வில் இருந்தும் மின்துறை தனியார்மயம் ஆக்கப்படுவதிலிருந்தும் காப்பாற்றப்படுவீர்கள். 2026 ஆம் ஆண்டு விரைவில் என குறிப்பிடப்பட்டிருந்தது. புதுவையில் தற்போது என்ஆர் காங்கிரஸ்- பாஜக தலைமைலியான அரசு மின் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
அத்துடன் மின் துறையையும் தனியார்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை சுட்டிக் காட்டி வரும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து காங்கிரஸ் ஆதரவாளர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை காங்கிரஸ் கட்சியினர் நூதன முறையில் கொண்டாடினர்.
இதை பாஜக நிர்வாகிகள் சிலர், தமிழகத்தில் கூட தானே மின் கட்டணம், சொத்து கட்டணம் உள்ளிட்டவை உயர்ந்துள்ளது. ஏன் அந்த மாநிலத்திற்கும் இந்த பதாகைகள் பொருந்தும் தானே என கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில் அதுகுறித்து ஏன் தங்களது எதிர்ப்பை காங்கிரஸ் காட்டவில்லை என்ற கேள்வி எழுகிறது.
தமிழகத்தில் நிர்வாக சீரமைப்புக்காக கட்டண உயர்வு என்றால் புதுவையிலும் அதற்காகத்தானே உயர்ந்துள்ளது. இதில் பொதுமக்களை காக்க என்ன இருக்கிறது? என கேள்விக்கணைகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications