புதுச்சேரி அரசு ஹோட்டலை நான் விலைக்கு கேட்டேனா? "எல்லாமே பொய்.." விக்னேஷ் சிவன் திடீர் விளக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் கீழ் இயங்கி வரும் சீகல்ஸ் ஹோட்டலை சினிமா இயக்குநரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் விலைக்குக் கேட்டதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இது தொடர்பாக மீம்ஸ்கள் கூட இணையத்தில் உலா வந்தது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் சில முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார்.
சிம்பு நடித்த போடா போடி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்த படம் அதிக வசூல் செய்யவில்லை என்ற போதிலும் விமர்சன ரீதியாகப் பலரது பாராட்டுகளையும் பெற்றது.

விக்னேஷ் சிவன்: அதைத் தொடர்ந்து நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை அவர் இயங்கியுள்ளார். இவர் நானும் ரவுடி தான் படத்தை இயக்கும் போது அந்த படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டது. பல ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இப்போது அவர் லவ் டூடே புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதற்கிடையே கடந்த வாரம் புதுச்சேரி சென்ற அவர் புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்தார். இந்த சந்திப்பு கொஞ்ச நேரம் மட்டுமே இருந்தது. இருப்பினும், அந்த மீட்டிங்கை தொடர்ந்து இணையத்தில் ஒரு தகவல் உலா வர தொடங்கியது.
பரவிய தகவல்: அதாவது புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அம்மாநில அரசின் 'சீகல்ஸ்' ஹோட்டல் இயங்கி வருகிறது. அந்த ஹோட்டலை விக்னேஷ் சிவன் ஏலம் கேட்டதாகச் சொல்லப்பட்டது. அரசு சொத்தை விற்க முடியாது என்று அமைச்சர் லட்சுமி நாராயணன் சொல்லவே, குறைந்தது ஒப்பந்த அடிப்படையிலாவது வாடகைக்குத் தருவீர்களா? என்று கேட்டதாக இணையத்தில் செய்தி பரவியது.
விளக்கம்: இதையடுத்து பலரும் இயக்குநர் விக்னேஷ் சிவனை கிண்டல் செய்யத் தொடங்கினர். பலரும் பல விதமான மீம்ஸ்களையும் கூட இணையத்தில் பகிர்ந்தனர். அவை டிரெண்டாகின. இந்தச் சூழலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். தான் அரசு ஹோட்டலை விலைக்குக் கேட்கவில்லை என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "பாண்டிச்சேரியில் நான் அரசு சொத்தை வாங்க முயன்றதாகப் பரப்பப்படும் செய்தியைக் குறித்துத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் பாண்டிச்சேரி விமான நிலையத்தில் எனது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி பெற அங்குச் சென்று இருந்தேன்.
என்ன நடந்தது: அப்போது மரியாதை நிமித்தமாக (புதுச்சேரி) முதலமைச்சர் மற்றும் சுற்றுலா அமைச்சரைச் சந்தித்தேன். இந்த சந்திப்புக்குப் பிறகு, அப்போது என்னுடன் வந்த உள்ளூர் மேனேஜர் அவருக்காக ஏதோ விசாரித்து இருக்கிறார். அதைக் காரணமே இல்லாமல் என்னுடன் இணைத்து தகவலைப் பரப்பி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் நீங்கள் உருவாக்கிய மீம்ஸ், ஜோக்குகள் மிகவும் வேடிக்கையாக இருந்தது. ஆனாலும், அவை தேவையற்றவை.. எனவே, இதைத் தெளிவுபடுத்த விரும்பினேன்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த விளக்கமும் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications