Puducherry Voters list: வெளியானது புதுச்சேரி இறுதி வாக்காளர் பட்டியல்! மொத்தம் எத்தனை வாக்காளர்கள்?
புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தைத் (SIR) தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். புதுச்சேரியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7,88,696 ஆக உள்ளது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் முடிந்த பீகாரிலும் இந்தப் பணிகள் நடைபெற்றன. இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த மாதம் 4 ஆம் தேதி முதல் இந்த சிறப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLO) இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
வாக்காளர்கள் பூர்த்தி செய்து அளித்த விண்ணப்பங்களை, பி.எல்.ஓக்கள் வீடு வீடாகச் சென்று சேகரித்தனர். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன்.
புதுச்சேரியில் மட்டும் 7.66 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஆண்கள் 3,70,955 பேர், பெண்கள் 4,17,620 பேர், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் உள்ளனர். இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 85,530 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது, சுமார் 10 சதவீதம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளில் 22,452 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலுக்கு பிறகு புதுச்சேரியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7,88,696 ஆக உள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் என மொத்தமுள்ள 30 தொகுதிகளில் மொத்த பேர் 9,44,111. புதுச்சேரியில் 4,43,495 ஆண் வாக்காளர்களும் 5,00,477 பெண் வாக்காளர்களும் உள்ளனர். புதுச்சேரியில் மூன்றாம் பாலினத்தவர்கள் 139 பேர் உள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
வில்லியனூர் தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். அதேநேரம், ராஜ்பவன் தொகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள் உள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications