நம்பி ஏமாந்துடாதீங்க... முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சொல்வதை கேளுங்க
புதுச்சேரி: மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில், ஒவ்வொரு வாக்கும் அவசியம் மற்றும் இந்திய தேர்தல் வரலாறு என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கலந்து கொண்டு பேசியதாவது: மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு நடக்க வாய்ப்பில்லை என்றார்.

மேலும், வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் தொடர்பான விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்கான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டே தெரிந்து கொள்ள வேண்டும். மாறாக, தவறான செய்திகளை உண்மை என்று நம்பி ஏமாந்து விடக்கூடாது என்றும் கூறினார்.
பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு பிறகு ராஜ் நிவாசிற்கு சென்ற நவீன் சாவ்லா அங்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, இந்திய தேர்தல் தொடர்பாக தான் எழுதியுள்ள புதிய புத்தகத்தையும் நவீன் சாவ்லா கிரண்பேடியிடம் வழங்கினார் .
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications