கோதாவரி ஆற்றில் மீண்டும் வெள்ளபெருக்கு - தண்ணீரில் தத்தளிக்கும் ஏனாம் மக்கள்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் மழை இல்லாத போதிலும், கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் ஏற்படும் வெள்ளம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியத்தை நோக்கி வந்து கடலில் கலக்கிறது. ஒவ்வொரு வெள்ளத்தின் போதும் ஏனாம் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால், ஏனாம் பகுதியில், ஆற்றங்கரையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிர மாநிலங்களில் கடந்த ஜூலை மாதம் முதல் பெய்த கனமழையால் கிழக்கு கோதாவரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏனாம் பிராந்தியம் தண்ணீரால் சூழப்பட்டது. இந்த மாநிலங்களில் மழை நின்ற நிலையில், ஏனாம் பிராந்தியத்திலும் வெள்ளம் வடிந்து, சகஜ நிலைக்கு திரும்பியது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மீண்டும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கோதாவரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால், கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கோதாவரி ஆற்றில் கடைமடையில் உள்ள ஏனாமில் தற்போது மழையில்லை என்றாலும், கோதாவரி ஆற்று வெள்ளம், ஏனாம் பிராந்திய நகருக்குள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் மக்கள் வெளி வரமுடியாமல் தவித்து வருகின்றனர். அவசர தேவைக்குக்கூட படகில் தான் செல்ல வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
5 வது நாளாக இன்றும் வெள்ள பெருக்கு அதிகரித்து காணப்படுவதால், பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஏனாமின் தாழ்வான பகுதிகளான பாலயோகி நகர், அய்யன்னா நகர், பரம்பேட்டா, குரு கிருஷ்ணாபுரம், கோன வெங்கட்டரத்னம் நகர், பிரான்ஸ்டிப்பா, ஓல்டு ராஜுவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் மக்கள் வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு படகுகள் மூலம் உணவுப் பொட்டலங்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் முதியோர் இல்லம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் மழை நின்று, கிழக்கு கோதாவரி ஆற்றில் வெள்ள பெருக்கு எப்போது குறையும் என ஏனாம் பிராந்திய மக்கள் கவலையுடன் இருந்து வருகின்றனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications