Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீகார் சட்டசபை தேர்தலில் நடந்தது போலவே தற்போது புதுவையிலும் இந்தியா கூட்டணிக்குள்ளேயே போட்டியிடும் சூழல் உருவாகி உள்ளது. புதுவையில் 5 தொகுதிகளில் காங்கிரசும், திமுகவும் நேருக்கு நேர் போட்டியிடுகிறது. காங்கிரஸ் தான் இதற்கு எல்லாம் காரணம் என கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக சாடியுள்ளன.

கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வரும் 9 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. புதுவையில் மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதற்கான வேட்புமனு தாக்க கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. கடந்த 23 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

INDIA Alliance Faces Internal Clash in Puducherry as Congress and DMK Set for Direct Contest

294 பேர் களத்தில் உள்ளனர்

நேற்றுடன் வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் என்பதால் தொடர்ந்து வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியலில், 30 தொகுதிகளில் 294 பேர் களத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக உழவர்கரை, முதலியார்பேட்டை, நெட்டப்பாக்கம், நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளில் தலா 14 பேர் போட்டியிடுகின்றனர்.

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக ஒரு அணியாகவும், காங்கிரஸ், திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு என இந்தியா கூட்டணி ஒரு அணியாகவும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு அணி என களமிறங்கின. இதுபோக நாம் தமிழர் கட்சி, பாமக உள்ளிட்ட கட்சிகளும் தனித்தனியாக களம் இறங்கி உள்ளன. இந்த நிலையில் பீகாரைப் போலவே திமுகவும் காங்கிரசும் ஒரே தொகுதியில் போட்டியிட்டுள்ளன.

நேரடியாக மோதும் திமுக காங்கிரஸ்

அதாவது புதுவையில் 5 தொகுதிகளில் காங்கிரஸ், திமுக நேருக்கு நேர் போட்டியிடுகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் 14 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்தன. ஆனால் சில குறிப்பிட்ட தொகுதிகளை பெறுவதில் இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது. இதற்கிடையே வேட்பு மனு தாக்கல் முடிவடைய 23ஆம் தேதி கடைசி நாளாக இருந்தது.

ஆனால் அன்றும் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இரு கட்சி சார்பிலும் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். தொகுதிகள் முடிவடைந்த பின்னர் வேட்பு மனுவை வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது. இவ்வாறாக மொத்தம் 6 தொகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தது. பின்னர் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து 6 தொகுதிகளில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற திமுக கூறியது.

அந்த 5 தொகுதிகள் என்னென்ன?

இதில் நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த ஆனந்தபாபு மட்டுமே தனது மனுவை வாபஸ் பெற்றார். மற்ற 5 தொகுதிகளில் உள்ளவர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற மறுத்து விட்டனர். இதனால் புதுவையில் தற்போது திருபுவனை, மங்கலம், காலாப்பட்டு, ராஜ்பவன், காரைக்கால் தெற்கு ஆகிய 5 தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்குள்ளேயே போட்டி ஏற்பட்டுள்ளது.

பீகார் அரசியலை போல

பீகாரிலும் இப்படித்தான் நடந்தது. பீகார் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு புறமும், இந்தியா கூட்டணி ஒருபுறமும், பிரசாந்த் கிஷோர் ஒருபுறம் என மும்முனை போட்டி நிலவியது. இதில் என்.டி.ஏவில் தொகுதி உடன்பாடு சலசலப்புக்கு மத்தியில் சுமுகமாக முடிவடைந்தது. ஆனால் இந்தியா கூட்டணியில் கடைசி வரை முடிவாகவில்லை.

இதனால் இந்தியா கூட்டணி கட்சிக்குள்ளேயே 10 தொகுதிகளில் போட்டி ஏற்பட்டது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், விகாஸ்ஷீல் இன்சான் ஆகிய மூன்று கட்சிகளும் 14 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டு அதில் 4 பேர் மட்டுமே வேட்பு மனுவை திரும்பபெற்றதால் 10 தொகுதிகளில் கூட்டணிக்கு உள்ளேயே போட்டி ஏற்பட்டது. கடைசியில் தேர்தல் ரிசல்ட் பாஜக கூட்டணிக்கே சாதகமாக அமைந்தது. தற்போது புதுவையிலும் காங்கிரஸ் இப்படி செய்திருப்பதை கம்யூனிஸ்ட் கட்சிகளும், விசிகவும் கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தனித்து போட்டியிடும் விசிக

காங்கிரசால், புதுவை சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் 4 இடங்களில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஊசுடு - அரிமா தமிழன், நெட்டபாக்கம் - அமுதவன், உழவர்கரை - புஷ்பலதா, ஏனாமில் மெல்லம் சீனிவாச ராவ் ஆகிய வேட்பாளர்களை அறிவித்ததோடு, காங்கிரஸ் கட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியாற்ற வேண்டாம் என்றும் கூறியுள்ளது.

தனது கட்சி வேட்பாளரை வெற்றி கடுமையாக உழைக்க வேண்டும். 4 தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளில் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை திருமாவளவனிடம் பேசி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+