இது என்னடா புதுச்சேரிக்கு வந்த சோதனை- சரக்கு கடை திறந்தும் வாங்க வராத குடிமகன்கள்
புதுச்சேரி: புதுச்சேரியில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மதுபானக்கடைகள் இன்று திறக்கப்பட்டன. தமிழகத்திற்கு இணையாக மூன்று மடங்கு வரை மதுபானங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் மதுபானங்களை வாங்க குடிமகன்கள் ஆர்வம் காட்டவில்லை.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 4 வது கட்டமாக வரும் 31 ஆம் தேதி வரை புதுச்சேரியில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக புதுச்சேரியில் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனிடையே மூன்றாம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை அளித்ததை தொடர்ந்து புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று முதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். இரண்டு மாதங்களுக்கு பிறகு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டாலும், மதுபானங்களின் விலை தமிழகத்திற்கு இணையாக மூன்று மடங்கு வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் மதுபானங்களை வாங்க குடிமகன்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் மதுக்கடைகளில் குடிமகன்களின் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. அதேபோல் குடிமகன்களின் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.

ஒவ்வொரு மதுக்கடை முன்பும் திருத்தப்பட்ட விலை பட்டியலும் ஒட்டப்பட்டிருந்தது. இதனிடையே ஊரடங்கின் போது கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்த 102 மதுபான கடைகளை திறக்க இன்று அனுமதிக்கப்படவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications