ஒன்றல்ல, இரண்டல்ல.. மொத்தம் 25 நாக பாம்புகள்.. அதுவும் வீட்டுக்கு பின்னால்.. உறைந்துபோன புவியரசன்
புதுச்சேரி: புதுச்சேரி அருகே பாகூர் பகுதியில் வீட்டின் பின்புறத்தில் 25-க்கும் மேற்பட்ட நல்ல பாம்பு குட்டிகள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
புதுச்சேரி அருகே உள்ள பாகூர் பங்களா வீதியைச் சேர்ந்தவர் புவியரசன் (25). கட்டடத் தொழிலாளி. புவியரசன் மற்றும் அவரது தாயார் சிமெண்ட் சீட் போட்ட வீட்டில் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

சமூக ஆர்வலர்
இந்த நிலையில் வீட்டில் இருந்து புவியரசன் வெளியே வந்தார் அப்போது வீட்டின் பின்புறத்தில் நல்ல பாம்பு குட்டிகள் ஊர்ந்து செல்வதை கண்டு திடுக்கிட்டார். உடனடியாக இது குறித்து அப்பகுதியில் பாம்பு பிடிக்கும் சமூக ஆர்வலரான விக்கி என்கின்ற விக்னேஷ் என்பவரை வரவழைத்தனர்.

25 குட்டிகள்
பாம்பு குட்டிகள் வீட்டு பின்புறத்தில் இடைப்பட்ட பகுதியில் இருக்கிறதா என அவர் தோண்டி பார்த்தார். அப்போது அங்கு ஏராளமான பாம்பு குட்டிகள் இருந்தன. சுமார் 25-க்கும் மேற்பட்ட பாம்புகளை அவர் லாவகமாக பிடித்தார்.

இரை தேடி
வீட்டுப் பின்புறத்தில் நல்ல பாம்பு குட்டிகளை பிடித்து விட்ட பின்னரே புவியரசன் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முட்டையிட்டு குட்டிகளை ஈன்று நல்ல பாம்பு இரை தேடி அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு
ஆனாலும் குட்டிகளை தேடி நல்ல பாம்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என அச்சமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பின்னர் பிடிக்கப்பட்ட நல்ல பாம்பு குட்டிகளைப் பாகூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications