57 நாட்களுக்கு பிறகு புதுச்சேரியில் பேருந்து சேவை தொடக்கம்.. பொதுமக்கள் ஹேப்பி!
புதுச்சேரி: புதுச்சேரியில் 57 நாட்களுக்கு பிறகு இன்று முதல் உள்ளூர் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்து பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி மாநிலத்தில் 4 ம் கட்டமாக வரும் 31 ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 4 ஆம் கட்ட ஊரடங்கில் புதுச்சேரி அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கியுள்ளது. அதாவது மதுக்கடைகள் திறப்பு, மாநிலத்துக்குள்ளேயே உள்ளூர் பேருந்துகளை இயக்குவது, கார், ஆட்டோக்கள் இயக்கம். கடைகள், ஓட்டல்கள் இரவு 7 மணி வரை திறந்து வைக்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


அதன்படி முதல் கட்டமாக புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளான கோரிமேடு, நல்லவாடு, கொம்பாக்கம், வில்லியனூர், டி.என்.பாளையம் என 5 வழித்தடங்களில் மட்டும் உள்ளூர் பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

மேலும் பயணிகள் முக கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பேருந்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் பயணிகள் இருக்கையில் அமரும் போது சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும் என்ற கட்டுபாடும் விதிக்கபட்டுள்ளது. பேருந்துகள் புறப்படுவதற்கு முன்பும், பேருந்து வந்த பின்பும் கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகிறது.


இதேபோல் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு பேருந்துகளை இயக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இருப்பினும் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு செல்லும் வழியில் தமிழக பகுதியான கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தை கடந்து செல்ல வேண்டி இருப்பதால் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர், கடலூர் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர்களிடம் புதுச்சேரி அரசு பேருந்து தமிழகத்தின் வழியாக செல்வதற்கு அனுமதி கேட்டு இருந்தார்.


இதனையடுத்து புதுச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் நாகை மாவட்ட வழியாக காரைக்காலுக்கு புதுச்சேரி பேருந்துகளை இயக்க இரு மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி அளித்துள்ளனர். மேலும் புதுச்சேரி அரசு பேருந்துகள் தமிழக பகுதிகளில் நிறுத்தி பயணிகளை ஏற்றாமல் நேரடியாக காரைக்காலுக்கு இயக்க வேண்டுமென நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.


இதனை தொடர்ந்து நாளை 21 ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு இடைநில்லா பேருந்து சேவை காலை 6 மணிக்கு தொடங்குகிறது. அதேபோல் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு மதியம் 12.30 மணிக்கு பேருந்து புறப்படும் என புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது


-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications