புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுச்சேரி அரசு சட்டகல்லூரி.. காலி பணியிடம் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஹைகோர்ட் உத்தரவு!

புதுச்சேரி அரசு சட்டகல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய கல்லூரி முதல்வருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சட்டகல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய கல்லூரி முதல்வருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி சட்டகல்லூரியில் ஆசிரியர் பற்றாகுறையின் காரணமாக பாடங்கள் நடத்தப்படவில்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ள முதல் பருவ தேர்வுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. அக்கல்லூரி மாணவரின் தந்தையும், புதுச்சேரியை சேர்ந்த வழக்கறிஞருமான சுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

MHC asks report on vacancy in Puducherry Government law college

அதில், இந்திய பார் கவுன்சிலின் விதிகளின்படி, சட்டகல்லூரியில் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என கோரினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, புதுச்சேரி அரசு சட்டகல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் குறித்து அறிக்கை தாக்கல் கல்லூரி முதல்வருக்கு உத்தரவிட்டார். மேலும், விசாரணையை ஜனவரி 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

English summary
Madras High Court asks report on vacancy in Puducherry Government law college.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X