பால்கனியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. புதுச்சேரி அப்பார்மெண்ட் வாசிகள் ஹேப்பி..!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களின் பொழுபோக்கிற்காக அப்பார்மெண்ட் பால்கனியில் புரஜக்டர் மூலம் திரைப்படங்களை ஒளிபரப்பு செய்து வருகிறார் கங்காசேகரன்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வரும் 17 ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பெரும்பாலான தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு மக்கள் வெளியே வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் அதிக நேரம் வீட்டில் முடங்கியுள்ளனர்.

படங்கள்

படங்கள்

வீட்டில் இருப்பவர்களுக்கு பொழுதுபோக்காக உள்ள தொலைகாட்சிகளிலும் புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. பழைய நிகழ்ச்சிகளே திரும்ப திரும்ப மறு ஒளிபரப்பு செய்யப்படவதால், மக்கள் டிவி பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர். இதனால் நகரத்தில் இருப்பவர்கள் செஸ், கேரம், செல்போன் மற்றும் கணினியில் வீடியோ கேம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர்.

கிராமத்து விளையாட்டு

கிராமத்து விளையாட்டு

கிராமத்தில் இருப்பவர்கள் பல்லாங்குழி, தாயம், பரமபதம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகர் அப்பார்மெண்டில் வசிப்பவர்களின் பொழுதுபோக்கிற்காக புரொஜெக்டர் மூலம் சுவற்றில் திரைப்படத்தை ஒளிபரப்பு வருகிறார் எலக்ரானிக்ஸ் கடை உரிமையாளர் ஒருவர். புதுச்சேரி ரெயின்போ நகர் பகுதியில் உள்ளது சுதந்திர பொன்விழா நகர்.

பால்கனியில் படங்கள்

பால்கனியில் படங்கள்

இந்த பகுதியில் உள்ள ஒரு அப்பார்மெண்டில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதே அப்பார்மெண்டில் டிவி, புரொஜெக்டர், கேமரா என எலக்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்து வரும் கங்கா சேகரன் என்பவரும் தனது குடும்த்தினருடன் வசித்து வருகிறார். 144 தடை உத்தரவால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் அப்பார்ட்மெண்ட் வாசிகளின், பொழுபோக்கிற்காக, அவர்களின் விருப்பத்திற்கேற்ப , புரொஜெக்டர் மூலம் படங்களை ஒளிபரப்ப முடிவு செய்தார் கங்காசேகரன்.

செம ஐடியா

செம ஐடியா

தினந்தோறும் தனது வீட்டின் பால்கனியிலிருந்து, எதிர் வீட்டில் உள்ள பால்கனியில் புரஜக்டர் மூலமாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படங்களை ஒளிபரப்பி வருகிறார். இதனை அப்பார்மெண்டில் வசிப்பவர்கள் மற்றும் நடைபயிற்சி செல்லும் அப்பகுதி பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். மேலும் அங்குள்ள மக்களுக்கு பிடித்த மற்றும் அவர்கள் விரும்பி கேட்கக்கூடிய படங்களை மட்டுமே இவர் ஒளிபரப்பி வருகிறார். கங்காசேகரினின் இந்த செயலுக்கு அப்பார்மெண்டில் வசிப்பவர்வகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+