தீபாவளி பரிசு காத்திருக்கு.. போன் நம்பர் வாங்கி பாஜகவில் இணைத்த கும்பல்! புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி
புதுச்சேரி: புதுச்சேரியில் அறக்கட்டளையில் உறுப்பினராக இணைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குவோம் எனக் கூறி மக்களிடம் செல்போன் எண் வாங்கி பாஜகவில் இணைத்துள்ளனர். செல்போன் எண் தந்தவர்களுக்கு பாஜகவில் இணைந்ததாக குறுஞ்செய்தி வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் புதுப்பிப்பு பணிகள் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. பாஜகவினர், ஆங்காங்கே முகாம்களை நடத்தி பாஜகவில் உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் மக்களை ஏமாற்றி போன் நம்பரை வாங்கி அவர்களை பாஜகவில் உறுப்பினராகச் சேர்த்து விட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டையில் அறக்கட்டளையில் இணைப்பதாக கூறி மக்களிடம் செல்போன் எண் வாங்கி உள்ளனர். தீபாவளிக்கு பரிசு வழங்கப்படும் என்று கூறி அதற்கு அறக்கட்டளையில் உறுப்பினராக வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இதனை நம்பி பலரும் தங்கள் போன் நம்பர், ஆதார் அட்டை எண் ஆகியவற்றை கொடுத்த நிலையில், செல்போன் எண் தந்தவர்களுக்கு பாஜகவில் இணைந்ததாக குறுஞ்செய்தி வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாஜகவில் இணைந்ததாக எஸ்எம்எஸ் வந்தாலும், எங்களுக்கு விருப்பமான கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் சிலர் வந்து, அறக்கட்டளையில் உறுப்பினராக சேர்க்கிறோம், நலத்திட்ட உதவிகளை வழங்குவோம் எனக் கூறி போன் நம்பர் கேட்டனர். அதை நம்பி போன் நம்பரை கொடுத்த நிலையில் பாஜகவில் சேர்ந்துள்ளதாக மெசேஜ் வந்துள்ளது. பொய் சொல்லி நம்பர் வாங்கி இப்படி நம்பிக்கை துரோகம் செய்துள்ளனர் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
அந்தப் பகுதியில் மட்டும் சுமார் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள ஒவ்வொருவரின் போன் நம்பர், ஆதார் எண்ணையும் வாங்கிச் சென்று இவ்வாறு பாஜகவில் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!










Click it and Unblock the Notifications