புதுச்சேரி அரசு பஸ்ஸில் யாரது? நோட்டு புத்தகத்தில் ஆபாசம்.. 1ம் வகுப்பு மாணவியையும் விடல.. கொடுமை
புதுச்சேரி: புதுச்சேரி தவளக்குப்பத்தில் 1ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை பொதுமக்கள் ஆத்திரமடைந்து விரட்டி விரட்டி தாக்கினார்கள்.. அத்துடன் பொதுமக்களின் 7 மணி நேர சாலை மறியல் போராட்டத்திற்கு பிறகு போக்சோ பிரிவின் கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே அந்த தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.. இங்கு 1ம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால், பெற்றோர் தங்கள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.. அப்போது மருத்துவர்கள் சொன்னதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

விரட்டி விரட்டி தாக்குதல்:
பள்ளியில் அறிவியல் ஆசிரியர் மணிகண்டன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.. இதையடுத்து, பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டபோது, பள்ளி நிர்வாகம் இதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லையாம்.. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், உறவினர்கள், குழந்தைகள் நல குழுவுக்கும், தவளக்குப்பம் போலீசுக்கும் தகவல் தந்துவிட்டு, நேற்று முன்தினம் தனியார் பள்ளியை முற்றுகையிட திரண்டனர். அங்கிருந்த ஆசிரியர் மணிகண்டனையும் விரட்டி விரட்டி தாக்கியிருக்கிறார்கள்.
பிறகு, தகவலறிந்து வந்த போலீசார், ஆசிரியரை மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார்கள். எனினும் கோபம் அடங்காத உறவினர்கள், பள்ளியில் இருந்த கண்ணாடி, மேஜை, கணினி அறை, நாற்காலி என அனைத்தையும் நொறுக்கி சூறையாடினர். பிறகு, புதுச்சேரி- கடலூர் சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர்.
7 மணி நேரம் நடந்த மறியல்
இதுகுறித்து தகவலறிந்த சபாநாயகர் செல்வம், நேரடியாகவே போலீஸ் உயரதிகாரிகளுடன் கிளம்பிவந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆசிரியர் மணிகண்டன் மீது போக்சோ வழக்கு பதிய வேண்டும் என்று பொதுமக்கள் கோஷமிட்டார்கள்.
தொடர்ந்து 7 மணி நேரமாக இந்த மறியல் நடந்ததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பிறகு, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், பள்ளி தாளாளர், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், பள்ளிக்கு சீல் வைக்கப்படும் என உறுதி தந்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
18 மீனவ கிராமங்கள்
அதற்குள் சிறுமி சம்பவத்தை கண்டித்து 18 மீனவ கிராமத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், நேற்று நடக்கவிருந்த 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வும் ரத்து செய்யப்பட்டது. பள்ளி நுழைவாயில் பூட்டு போட்டு மூடப்பட்டிருந்ததால், 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் வீட்டுக்கே திரும்பி சென்றுவிட்டார்கள். இவர்களுக்கு வேறு தேதியில் செய்முறை தேர்வு நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மணிகண்டனை அடையாளம் காட்டுவதற்காக, சிறுமியுடன் பெற்றோர், போலீசார், சைல்டு லைன் நிர்வாகிகள் பள்ளிக்கு சென்றிருக்கிறார்கள். இந்த விஷயம் தெரிந்துகொண்ட மணிகண்டன், யாரிடமும் சிக்காமல் மறைந்து கொண்டாராம்.. இதனால், மணிகண்டன் தவிர மற்ற ஆசிரியர்களை பார்த்துவிட்டு, யாரையுமே சிறுமி அடையாளம் காட்டவில்லை.
பஸ்ஸில் மறைந்த மணிகண்டன்
பிறகு, ஆசிரியர் மணிகண்டன் பஸ்ஸில் மறைந்து கொண்டிருந்தாராம்.. இதை பார்த்த சிறுமி, உடனே போலீசாரிடம் அடையாளம் காட்டியுள்ளார்.. அதற்கு பிறகே மணிகண்டனை போலீசார் நள்ளிரவில் போக்சோவில் கைது செய்துள்ளனர்.
இந்த அறிவியல் ஆசிரியர் மணிகண்டனுக்கு 25 வயதாகிறது.. தவளக்குப்பம் போலீசார் முதலியார் பேட்டையை சேர்ந்தவராம்.. பிளஸ்1, பிளஸ்2 பயிலும் மாணவிகளின் நோட்டு புத்தகங்களில், ஆபாச வார்த்தைகளை எழுதி வைத்திருக்கிறாராம்.. அதில் உடல் நலம் விசாரிப்பதுபோல் மாத்திரை சாப்பிட்டாயா? என்றும் மாதவிடாய் குறித்தும் பாலியல் ரீதியாகவும் வார்த்தைகளை எழுதி வந்திருக்கிறார்.
இதெல்லாம் இப்போதுதான், மற்ற மாணவிகளின் பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது. இதன்காரணமாக, அங்கு படிக்கும் மாணவிகளின் பெற்றோர், தங்களது மகள்களின் நோட்டு, புத்தகங்களையும் வாங்கி ஆய்வு செய்து வருகிறார்களாம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications