கைலியில் கட்டி 9 வயது சிறுமியை சிதைத்த கொடூரன்..புதுச்சேரி ஜெயிலில் துண்டால் கழுத்தை இறுக்கி தற்கொலை
புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபர், சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலையும் செய்யப்பட்டார். சிறுமியின் கை, கால்களைக் கட்டி, 2 கொடூரரர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர். இவர்கள் இருவருமே அதே பகுதியைச் சேர்ந்த கஞ்சா ஆசாமிகளான விவேகானந்தன் (57) மற்றும் கருணாஸ் (19) ஆகியோர் ஆவர்.
பலாத்காரத்தின்போது, சிறுமியின் வாயை பொத்தியதால், மூச்சுத்திணறி சிறுமி பலியாகி உள்ளார்.. இறுதியில், சிறுமியின் வீட்டருக்கே 100 மீட்டர் தொலைவில் உள்ள வாய்க்காலில், சாக்கு மூட்டையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. நாடு முழுவதும் இந்த கொலை சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருந்தது.

சிறுமி கொலை: இதனால், சிறுமியின் குடும்பத்துக்கு ஆதரவாக புதுச்சேரி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தனர். சிறுமியை கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் என்று ஆவேசமாக கொந்தளித்தார்கள்.
சிறுமியின் கொலைக்கு போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து இருப்பதே முக்கிய காரணம், போதையை ஒழியுங்கள் என்று கூறி, கடலில் இறங்கி போராட்டமும் செய்தனர்.. கல்லூரி, பள்ளி மாணவர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என மொத்த பேரும் போராட்டத்தில் குதித்தனர்.. சாலைமறியல், சட்டசபை முற்றுகை, கடலில் இறங்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை என 10-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.
2 பேர் கைது: இந்த கொலை தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன், கருணாஸ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், புதுச்சேரி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட விவேகானந்தன் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.. சிறையில் உள்ள கழிவறையில், கைலியிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பரபரப்பு: இது பற்றி தகவல் அறிந்த சிறைக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விவேகானந்தனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக சிறுமி கொலை வழக்கில், போலீசார் 500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.. காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷோபனா தேவி முன்னிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.. இதனால் விரைவில் புதுச்சேரி சிறுமி வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
கழிவறை: ஆனால், அதற்குள் கழிவறையிலேயே துண்டை வைத்து கழுத்தை நெரித்து 57 வயது விவேகானந்தன் தற்கொலை செய்துள்ளது, அதுவும் சிறைக்குள்ளேயே கைதி தூக்கிட்டு கொண்டது, சிறைவட்டாரங்களில் மட்டுமல்லாமல், புதுச்சேரியிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கைதான இருவருமே சிலமுறை காலாப்பட்டு மத்திய சிறையில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்ட நிலையில் இவர்களை கண்காணிப்பதற்காகவே தனியாக காவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இருப்பினும் தொடர்ந்து விவேகானந்தன் தொடர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று இந்த முடிவை எடுத்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications