புதுச்சேரி 9 வயது சிறுமி பலாத்காரம்! களமிறக்கப்பட்ட ஸ்பெஷல் டீம்! மேலும் 5 பேரை பிடித்த போலீஸ்! ஏன்?
புதுச்சேரி: புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு தொடர்பாக இன்று சிறப்புக் குழு விசாரணையை தொடங்கி உள்ளது. ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து புதுச்சேரி அரசு நேற்று இரவு உத்தரவு வெளியிட்டது.
இதையடுத்து சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டு, விசாரணையை இன்று காலை தொடங்கியது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை வேகமாக நடந்து வருகிறது. புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ், விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. முக்கியமாக எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
புதுச்சேரி சம்பவம்: புதுச்சேரியில் 9 வயது நிரம்பிய சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியை மட்டுமின்றி மொத்த தேசத்தையும் இந்த சம்பவம் உலுக்கி உள்ளது. இன்று சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட உள்ள நிலையில் மாயமாகும் முன்பு மகள் கடைசியாக தொட்டு விளையாடிய பொருட்கள் மற்றும் புத்தகத்தை கையில் எடுத்து தாய் கதறி அழுத சம்பவம் அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது.
புதுச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2ம் தேதி வீட்டு அருகே விளையாடிய நிலையில் திடீரென்று காணாமல் போனார். ஆனால் அப்போது தெரியாது.. அதன்பின் மிகப்பெரிய கொடூர சம்பவம் நடக்கும் என்று.
அந்த சிறுமியை குடும்பத்தினர் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 4 நாட்களாக சிறுமி பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை.
அதிர்ச்சி சம்பவம்: அதன்பின்தான் சிறுமியின் வீட்டருக்கே 100 மீட்டர் தொலைவில் ஒரு வாய்க்கால் உள்ளது. அதில் சாக்கு மூட்டையில் சிறுமியின் உடல் இருந்தது. சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது. மர்மநபர்கள் அவரை கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டி வீசியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் உடலை மருத்துவர்கள் சோதனை செய்தனர். இந்த வேளையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இரண்டு பேர் கைது: அதன்பின் புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் இரண்டு பேர் பிடிபட்டனர். சிறுமியை ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாக கூறி இரு கயவர்களும் அழைத்து சென்றாக கூறப்படுகிறது.
முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய இரண்டு பேர்தான் அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளனர். முதலில் சந்தேகத்தின் பெயரில் இவர்கள் 2 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் உண்மையை சொல்லவே.. இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications