முத்திருச்சே.. ஜெயலலிதா பற்றியே தப்பா பேசுறதா? அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்த அதிமுக
புதுச்சேரி: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து புதுச்சேரியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கடந்த மார்ச் மாதம் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததில் இருந்தே இரு கட்சிகள் இடையிலான மோதல் பூதாகரம் எடுத்தது. இதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமியையும், அதிமுகவினரையும் பாஜகவினர் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.

அண்ணாமலையின் வலதுகரமான அமர் பிரசாத் ரெட்டி அதிமுகவை விமர்சிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட, அவருக்கு பதிலளிக்கும் வகையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் ட்விட்டரில் எச்சரித்து இருந்தன. ட்விட்டரில் தொடங்கிய இந்த மோதல் களத்திலும் எதிரொலித்தது.
அதன் பின்னர் இரு கட்சி பிரமுகர்களும் ஒருவர் மீது ஒருவர் சரிமாரி குற்றச்சாட்டுகளை சுமத்திக்கொண்டதுடன், அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமியின் படங்களும் எரிக்கப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் அணி தலைவர்கள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
"பாஜக தனியாக இருந்தால் மட்டுமே நம்மால் அதை தமிழ்நாட்டில் வளர்க்க முடியும். நான் தனியாக பாஜகவை வளர்த்து எடுக்க பாடுபட்டு வருகிறேன். எனக்கு உரிய சுதந்திரத்தை வழங்க வேண்டும். நான் பாஜகவின் மேனேஜர் ஒன்றும் இல்லை. கட்சியின் மாநில தலைவர் நான் என்றுதான் சொல்கிறேன்.
பாரதிய ஜனதா கட்சி வரும் 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், நான் வகித்து வகும் பாஜக மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக தொடர்வேன். பாஜகவை தமிழ்நாட்டில் வெற்றிபெற வைப்பதற்கான திட்டங்களை நான் வைத்து உள்ளேன்.
எனது வழியில் என்னால் செயல்பட முடியாதபோது கட்சியில் நான் வகிக்கும் பதவியில் இருந்தே ராஜினாமா செய்து விடுகிறேன்." என்றார். அண்ணாமலையின் இந்த பேச்சால் பாஜகவிற்கு உள்ளேயும் வெளியேயும் சலசலப்புகள் ஏற்பட்டன. அண்ணாமலை பாஜக தலைமைக்கே அழுத்தம் கொடுப்பதா என்று அக்கட்சிக்கு உள்ளிருந்தே விமர்சனங்கள் எழுந்தன.
அதன் பின்னர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று அறிவித்தனர். தங்களுக்குள் மோதல் இல்லை என்பதாக எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையும் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு வந்த அமித்ஷா நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் 25 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற வேண்டும் என தெரிவித்தார். அத்துடன் அதிமுக தலைவர்களும் அவர் சந்திக்கவில்லை. இது அதிமுகவை அதிருப்தியடைய வைத்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் அண்ணாமலை ஜெயலலிதா பற்றி தெரிவித்த கருத்து அக்கட்சியினரை கொந்தளிக்க வைத்து உள்ளது.
ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், "தமிழ்நாட்டில் ஆட்சி செய்த கட்சிகள் ஊழலில் ஈடுபட்டது. மக்கள் பணத்தை முறைகேடு செய்த எல்லா கட்சிகளையும் சொல்கிறேன். இது அனைத்து கட்சிக்கும் பொருந்தும். இங்கு நடைபெற்ற எல்லாமே ஊழல் ஆட்சியாகவே உள்ளது. முன்னாள் முதலமைச்சரே ஊழல் செய்ததால் தண்டிக்கப்பட்டு உள்ளார்." என்று தெரிவித்தார்.
அண்ணாமலை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவையே விமர்சித்து பேசியதாக கூறி ஜெயக்குமார், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அவரை கடுமையாக விமர்சித்து உள்ளனர். இந்த நிலையில் ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் பேச்சை கண்டித்து புதுச்சேரியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவருக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான்












Click it and Unblock the Notifications