பீஸ்ட் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதா? கொந்தளித்த அதிமுக நிர்வாகி
புதுச்சேரி: விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்துக்கு அரசு அனுமதியின்றி ரூ.100 கட்டணம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்ட திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை வைத்துள்ளார்.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற 13 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட 3 பாடல்களும் டீசரும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தன. இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், பல திரையரங்குகளிலும் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி விட்டன. இந்த நிலையில், பல திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Recommended Video
புதுச்சேரியிலும் நிர்ணயிக்கப்பட்டதைவிட ரூ.100 கூடுதல் கட்டணம் பீஸ்ட் படத்துக்காக வசூலிக்கப்பட்டுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து புதுச்சேரி அதிமுக கழக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், "நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் 13-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரியில் உள்ள தியேட்டர்களில் முதல் 5 தினங்களுக்கு சிறப்பு காட்சிகளுடன் சேர்த்து தினமும் 6 ஷோக்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஆனால் அனைத்து ஷோக்களுக்கும் ரூ.100 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் அனுமதி இல்லாமல் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திவிட்டு அரசு அனுமதி அளித்ததாக அறிவிப்பு செய்துள்ளனர். டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய திரையரங்க உரிமையாளர்கள் மீது மாவட்ட ஆட்சியர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட திரையரங்குகளில் பீஸ்ட் படத்தை திரையிட அனுமதி அளிக்க கூடாது." என்றார்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications