“ஸ்வாஹா”.. பாஜக அமைச்சர் என்றும் பாராமல் புதுச்சேரி மக்கள் சம்பவம்! பூஜை போட்டு எஸ்கேப் - செம காமெடி
புதுச்சேரி: சிலிண்டர் விலையேற்றம் குறித்து மக்கள் எழுப்பிய கேள்விகளை கண்டுகொள்ளாமல் பூஜை செய்த புதுச்சேரி பாஜக அமைச்சரின் செயல் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதிக்கு உட்பட மணப்பட்டு பகுதியில் ஏரி தூர்வாறும் பணியின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக அமைச்சர் சாய் சரவணக்குமார் கலந்துகொண்டு பூமிப் பூஜை செய்து ஏரி தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நூறு நாள் வேலைக்காக வந்திருந்த பெண்களிடம் அமைச்சர் சாய் சரவணக்குமார் பேசினார்.

அப்போது அவர், நூறு நாள் வேலைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 200 நாளாக உயர்த்தி இருப்பதுடன், அதற்கான கூலியையும் அதிகரித்து உள்ளார். என்றார். இதனை கேட்டு பெண்கள் அமைதியாக நின்றுகொண்டு இருந்தனர். உடனே அமைச்சர் சாய் சரவணகுமார் பெண்களிடம் கைத்தட்டுங்க என்று கேட்டு வாங்கினார். இதனை கேட்ட பெண்கள் சிரித்துக்கொண்டே கைத்தட்டினர்.

அப்போது சில பெண்கள் சிலிண்டர் விலை உயர்வு குறித்து பாஜக அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்கள். சிலர் விலை ரூ.1200 ஆக உயர்ந்துள்ளதாகவும், விலை எப்போது குறையும் எனவும் கூச்சலிட்டனர். ஆனால், பாஜக அமைச்சர் சாய் சரவணகுமார் அதை கண்டுகொள்ளவில்லை.
அங்கிருந்து பூஜை தட்டை எடுத்து வானை நோக்கி காட்டி ஸ்வாஹா என மந்திரங்களை முழங்கினார். இதனை கண்ட பொதுமக்கள் மட்டுமின்றி அமைச்சருடன் நின்றுகொண்டு இருந்த பாஜகவினரும் சிரித்துவிட்டார்கள்.

பூஜை முடிந்த பிறகு அமைச்சரிடம் மீண்டும் பெண்கள் சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினர். ஆனால், அமைச்சரோ அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் அங்கிருந்து சென்றார். இதனால் ஏரி தூர்வாரும் பணி தொடக்க விழா நகைச்சுவையாக முடிந்தது.












Click it and Unblock the Notifications