ஸ்கூலில் சாப்பாடு சரியா போடமாட்றாங்க. பசிக்குது சார்.. ஆசிரியரிடம் பேசும் மாணவன். வைரல் வீடியோ
புதுச்சேரி; புதுச்சேரி மாநிலம் திருபுவனை அருகில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் ஆசிரியரிடம், ஸ்கூலில் சாப்பாடு சரியா போடமாட்றாங்க பசிக்குது சார் என்று பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
கொரோனா ஊரங்கு காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் படிப்படியாக கடந்த டிசம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் திற்ககப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது 9 முதல் 12ம்வகுப்புகள் வரையில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

கல்லூரிகளை பொறுத்தவரை அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படுவிட்டன. அனைத்து வகுப்புகளும் கல்லூரிகளில் எடுக்கப்படுகின்றன. கல்லூரிகள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டன. தற்போதைய நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது.
ஆனால் புதுச்சேரியில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் திருபுவனை அருகில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் ஆசிரியரிடம் பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பேசும் மாணவன் , சார் ஏன் ஸ்கூலுக்கே வரமாட்றீங்களே என்கிறார். அதற்கு ஆசிரியர், தான், வேறு ஊருக்கு டிரான்ஸ்பர் ஆகிவிட்டதாக சொல்கிறார். இதற்கு பதில் அளித்து பேசும் சிறுவன், சார் ஸ்கூலில் சாப்பாடே போட மாட்றாங்க.. பசிக்குது சார், என்கிறார்.அத்துடன் வீடியோ முடிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications
