"எல்லாம் வெறும் நீலிக்கண்ணீர்!" ரங்கசாமி முதுகில் குத்தும் துணைநிலை ஆளுநர்.. நாராயணசாமி பரபர பேச்சு
புதுச்சேரி: புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தற்போதைய ஆளுநர் தமிழிசை ரங்கசாமியை அண்ணன் எனக் கூறி என்.ஆர். காங்கிரஸ் அரசைக் கொன்று வருவதாகப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் இப்போது பரபரப்பான ஒரு சூழல் உருவாகியுள்ளது என்றே சொல்லலாம். நேற்று புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தைக் கோரும் குழுவைச் சந்தித்த முதல்வர் ரங்கசாமி, அதிகாரம் இல்லாததால் தினமும் மன உளைச்சல் தான் ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களால் மக்களுக்கு எதுவுமே செய்து கொடுக்க முடியவில்லை என்று வேதனை உள்ளதாகவும் புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

நாராயணசாமி
மேலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பது மட்டுமே ஒரே தீர்வு என்றும் அவர் தெரிவித்தார். அவரது பேச்சு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே புதுச்சேரியில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என சமூக அமைப்பினர் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தபோது அவர்களிடம் பேசிய முதலமைச்சர், புதுச்சேரி மாநிலத்தில் அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும், புதுச்சேரியில் கோப்புகள் தேங்கி இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

அழுத்தம் தரவில்லை
மேலும், அதிகாரிகள் கேள்விகேட்டுத் திருப்பி அனுப்புகிறார்கள். மாநில அந்தஸ்து பெற முடியவில்லை, திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைக்காததற்கு மத்திய அரசும், தலைமைச் செயலாளர் தான் காரணம் என ரங்கசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.. கடந்த 2016இல் ரங்கசாமி நிபந்தனையின்றி மத்திய பாஜக அரசுக்கு ஆதரவு கொடுத்தார்.. மாநில அந்தஸ்து தேவை என்று மட்டுமே கூறி வந்தாரே தவிர, டெல்லி சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை..

புலம்பல்
2019ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் என்.ஆர்.காங்கிரஸ் அரசு மாநில அந்தஸ்து வேண்டும் எனக் கூறியிருந்தனர். ஆனால், அவர்கள் கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜக மாநில அந்தஸ்தைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை.. மேலும், என்.ஆர்.காங்கிரஸ் மாநில அந்தஸ்துக்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்தனர்.. ஆனால் இப்போது அதிகாரிகள் ஒத்துழைப்பே இல்லை எனப் புலம்ப ஆரம்பித்து விட்டார். உங்களது கோரிக்கைகளை பாஜக ஏற்கவில்லையா? மத்திய அரசுக்கு இவர் என்ன அழுத்தம் கொடுத்தார்.

பொம்மை ஆட்சி
அனைத்து கட்சியினரைக் கூட்டி ஆலோசனை நடத்தினாரா? அதுவும் இல்லை. மாநில அந்தஸ்து பெற என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், ரங்கசாமி ஒரு பொம்மையாக ஆட்சி நடத்தி வருகிறார்.. கொள்கைகளை நிறைவேற்ற முடியாத அரசாகவே என்.ஆர்.காங்கிரஸ் அரசு உள்ளது.. மாநில அந்தஸ்து, பெறப் போராடத் தயாரா? ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பதற்காக, நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்ள பாஜகவுக்கு அடிபணிந்து போகிறார் ரங்கசாமி. இவர் முதலமைச்சராக இருக்கிறது தகுதியற்றவர்.. ஆட்சியை நடத்த முடியவில்லை என்றால் ரங்கசாமி அரசியலை விட்டுச் செல்லலாம்.

முதுகில் குத்தும் ஆளுநர்
ரங்கசாமியும் மண் குதிரையும் ஒன்று தான். ரங்கசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.. ஆளுநர் தமிழிசை அடிக்கடி முதலமைச்சரும் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம் எனக் கூறி வருகிறார். அண்ணன் எனக் கூறி முதலமைச்சர் ரங்கசாமியைத் தமிழிசை முதுகில் குத்தி வருகிறார்.. எங்களது ஆட்சிக்கு கிரண்பேடி தொல்லை கொடுத்த போது ரசித்த ரங்கசாமி, இப்போது அவரது ஆட்சியில் நாங்கள் பட்டதை அனுபவித்து வருகிறார். கிரண்பேடி விஷத்தை வைத்துக் கொள்வார். ஆனால் தமிழிசை சவுந்தரராஜன் சர்க்கரை கொடுத்துக் கொன்று வருகிறார்" என்று அவர் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications