புதுச்சேரியில் வரும் பிப். 4 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு.. பல்வேறு தளர்வுகளும் அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்து வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிச. மாதம் முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஓமிக்ரான் பரவல் ஏற்பட்டது. இதனால் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியது.
இதன் காரணமாகத் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

புதுச்சேரி
இருப்பினும், யூனியன் பிரதேசமான புதுவையில் பொங்கல் வரையிலும் பெரியளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. புத்தாண்டு மற்றும் பொங்கல் சமயங்களில் கூட புதுச்சேரியில் பெரியளவில் எந்தவொரு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமலேயே இருந்தது. இதனால் அங்கு வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்தது. அதன் பின்னரே கொரோனா பாதிப்பைக் குறைக்கப் புதுவையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

தளர்வுகள்
இதனிடையே தற்போது புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், வரும் பிப்.4ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் எனப் புதுவை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்.. "புதுச்சேரியில் கொரோனா தொற்று காரணமாகப் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது வைரஸ் தொற்று குறைந்து வருவதால் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரிகள்
அதன்படி 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்குப் பாடங்கள் முடிக்கப்படாமல் இருப்பதால் வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் செயல்படும். பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு 9-ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.

மற்ற தளர்வுகள்
பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக இதுவரை எந்த ஒரு புகாரும் வரவில்லை அப்படி புகார் வந்தால் அந்தப் பள்ளியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். அதேபோல உணவகம் மற்றும் திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்கரைச் சாலைகளை முழு நேரம் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications