ஊரடங்கு நீட்டிப்பு.. டிசம்பர் 15-ம் தேதி வரை கட்டுப்பாடுகளை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவு..!
புதுச்சேரியில் டிசம்பர் 15 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
புதுச்சேரி: புதுச்சேரியில் தளர்வுகளுடனான ஊரடங்கு வருகிற டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது... பிறகு உச்சத்தில் இருந்த கொரோனா தொற்றின் பாதிப்பானது மெல்ல மெல்ல குறைய தொடங்கியது.
எனினும், பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது... அந்தவகையில், தமிழ்நாட்டில் அமலில் இருந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைவதாக இருந்தது.

ஸ்டாலின்
எனவே, தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கேரளாவுக்கு பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. அதன்படி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

நீட்டிப்பு
அதேபோல, புதுவையிலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது... புதுவையில் நவம்பர் 15-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று இரவு முடிவடைந்தது... இதையடுத்து மேலும் சில தளர்வு அளித்து வரும் டிசம்பர் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுவை மாநில செயலாக்க குழு உறுப்பினர் செயலர் அசோக்குமார் பிறப்பித்துள்ளார்.

அறிவிப்பு
அந்த உத்தரவில், "தினமும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். சமூக மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது. காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும். பெரிய மார்க்கெட்டில் உள்ள கடைகள் எப்போதும் போல் இயங்கலாம்.

உத்தரவு
திருமண விழாவுக்கு அதிகபட்சம் 100 பேரும், இறுதிச் சடங்குக்கு அதிக பட்சம் 20 பேரும் பங்கேற்கலாம். கடற்கரை சாலை மற்றும் பூங்காக்கள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். திரையரங்கங்கள், வணிக வளாகங்களில் 100 சதவீதத்துடன் நள்ளிரவு 12.30 மணி வரை இயங்கலாம்" என்று, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications