புதுவை 9 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை! இளைஞர் குற்றவாளி என தீர்ப்பு! மே 5 ல் தண்டனை விவரம்!
புதுவை: புதுவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இருவரில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மற்றொருவர் குற்றவாளி என புதுவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரங்கள் வரும் 5 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி. இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தனது வீட்டருக்கே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மாயமாகிவிட்டார். பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

பின்னர் 2 நாட்கள் கழித்து அந்த சிறுமி வீட்டருகே இருந்த கால்வாயில் சடலமாக கிடந்தார். அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியானது.
இதையடுத்து சிறுமியை கொன்றவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் 55 வயது முதியவர் விவேகானந்தன், 18 வயது கருணாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியை ஐஸ்கிரீமை காட்டி அழைத்து சென்ற கருணாஸ், விவேகானந்தனின் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். கருணாஸைத் தொடர்ந்து விவேகானந்தும் அந்த குழந்தையை பலாத்காரம் செய்த போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் உயிரிழந்தது. இதையடுத்து குழந்தையை இருவரும் மூட்டை கட்டி கால்வாயில் வீசிப்பட்டு மறுநாள் ஒன்று தெரியாதது போல் நடித்து ஊர்மக்களுடன் சேர்ந்து குழந்தையை தேடியது தெரியவந்தது.
இந்த நிலையில் விவேகானந்தன், கருணாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதனிடையே சிறுமியின் உடலுடன் அவருக்கு பிடித்த பொம்மைகள், உடைகள் வைக்கப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது.
இந்த நிலையில் காலாப்பட்டு சிறையில் இருவரும் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது விவேகானந்தன் தான் அணிந்திருந்த சட்டையை வைத்து கழுத்தை நெரித்து தற்கொலை முயற்சி செய்ய முயற்சித்துள்ளார். சப்தமிட்ட கருணாஸ்: உடனே அங்கிருந்த கருணாஸ் சப்தம் போட்டதுடன் வார்டன் ஓடி வந்து விவேகானந்தனை காப்பாற்றினார்.
இதைத் தொடர்ந்து சில நாட்களிலேயே விவேகானந்தன், கழிவறைக்குச் சென்று துண்டால் கழுத்தை நெரித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாக இந்த வழக்கு கருணாஸிடம் விசாரிக்கப்பட்டு வந்தது. இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் கருணாஸ் புதுவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது அவர் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி, வரும் 5ஆம் தேதி தண்டனை விவரங்களை அறிவிக்கிறார். கருணாஸுக்கு உச்சபட்ச தண்டனை விதிக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications