பப்பில் குடித்துவிட்டு பயங்கர ரகளை.. டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத்துக்கு புதுவை போலீஸ் வலை
புதுச்சேரி: புதுச்சேரியில் குடிபோதையில் தகராறு செய்த பிரபல யூட்யூப் சேனல் சமையல் கலைஞர் டாடி ஆறுமுகம் மகன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Recommended Video
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ளது ஏகே டார்வின் உணவகம். இந்த உணவகத்தில் நேற்று இரவு 8.30 மணிஅளவில் யூட்யூப் சேனல் சமையல் கலைஞர் டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத், அவரது நண்பர்களான ஜெயராம் மற்றும் தாமு ஆகிய 3 பேர் வந்தனர்.
அப்போது அந்த ஹோட்டலில் உள்ள PUB-ல் மது அருந்த வந்ததாக கூறப்படுகின்றது . அவர்கள் வந்ததில் இருந்து ஊழியர்களை அழைத்து கடுமையான வார்த்தைகளால் திட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஊழியர்
இந்நிலையில் இரவு 11 மணி ஆகிய பின்பும் அவர்கள் மது கேட்டுள்ளனர். ஆனால் அங்கிருந்த ஊழியர் 11 மணிக்கு மேல் மது தர மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த கோபிநாத் அந்த ஊழியர் ஜார்ஜஸ் சினாஸை கடுமையான வார்த்தைகளால் திட்டி, எனக்கே தர மாட்டாயா என கேட்டு பீர் பாட்டிலை உடைத்துள்ளார். மேலும் அந்த ஹோட்டலில் உள்ள பொருட்களை சூறையாடி மூவரும் பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

ரகளை சம்பவம்
பின்னர் வாக்குவாதத்திலும் கோபிநாத் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த ரகளை சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து கோபிநாத் உள்ளிட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது போலீஸாரிடமும் கோபிநாத் வாக்குவாதம் செய்துள்ளார்.

வீடியோ வைரல்
இதுகுறித்து வீடியோ வைரலாகி வருகிறது. அவர்களை எச்சரித்த போலீஸார் காவல்நிலையத்திற்கு வரசொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுளள்னர். அவர்கள் காவல் நிலையம் வரவில்லை. இதனை அடுத்து தனியார் ஹோட்டல் ஊழியர் ஜார்ஜஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதியப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

3 ஹோட்டல்கள்
டாடி ஆறுமுகத்தின் வில்லேஜ் ஃபுட் பேக்டரி எனும் யூடியூப் சேனல் மூலம் குக்கிங் வீடியோ உலகளவில் பிரபலம். இதை முறையாக கொண்டு சென்றவர் அவரது 32 வயதாகும் மகன் கோபிநாத். இந்த சேனலை 4.62 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். இதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்த டாடி ஆறுமுகம் மதுரை, புதுவையில் ஹோட்டல்களை நடத்தி வருகிறார். தற்போது டாடி ஆறுமுகம் என்ற பெயரில் புதுச்சேரியில் மூன்று இடங்களில் ஹோட்டல்கள் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதுவை உணவகத்தை கோபிநாத் நடத்தி வருகிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications