புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு.. ஆனால் சரக்கு வாங்கலாம்.. இதெப்படி இருக்கு!!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாளை முதல் அமர்ந்து மது அருந்தக்கூடிய மதுக்கடைகளை மூட முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் இன்றுமுதல் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் மதுபானக் கடைகளையும் மூட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இன்று இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி இதுதொடர்பாக விளக்கம் அளித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாளை முதல் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை அமர்ந்து மது அருந்தக்கூடிய மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாவும், மொத்தம் மற்றும் சில்லறை மது விற்பனைக்கு எந்தவித தடையும் இல்லை என தெரிவித்தார்.

மேலும் உத்தரவை மீறி மதுக்கடைகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எச்சரித்தார். தொடர்ந்து பேசிய அவர், மாஹே பிராந்தியத்தில் மூதாட்டி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மூதாட்டிக்கு அரசு மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாளைய தினம் தானும், சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும் மாஹே பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே புதுச்சேரியில் பேருந்து நிலையம், விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் எல்லைப் பகுதிகளில் வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனை செய்யப்படுவதில்லை. பெயரளவிற்கு மட்டுமே இந்த பகுதிகளில் மருத்துவர்கள் முகாமிட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

எனவே கொரோனா வைரஸ் தீவிரத்தை மாநில அரசு உணர்ந்துகொண்டு முறையாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
முன்னதாக நேற்று நாராயணசாமியிடம் இதுகுறித்து கேட்டபோது மது பார்களை மூட வேண்டாம் என்று 2 அமைச்சர்கள் கெஞ்சலாக அவரிடம் கூறினர். அதைக் கேட்ட நாராயணசாமி, ஏன் உங்களுக்கு சொந்தமா பார் இருக்கா என்று கலாய்த்தார். ஆனால் இன்று அமைச்சர்களின் வேண்டுகோளை சூப்பராக நிறைவேற்றி அவர்களுக்கு சியர்ஸ் சொல்லி விட்டார்!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications