யார் யாருக்கோ வாலாட்டி பதவியை பெற்றவர் திண்டுக்கல் லியோனி! காட்டமாக விமர்சித்த தமிழிசை சவுந்திரராஜன்
புதுவை: யார் யாருக்கோ வாலாட்டி பதவியை பெற்ற லியோனி முதல்வர் ரங்கசாமியை விமர்சிப்பதா என கேட்டு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
புதுவை அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறை சார்பில் தேசிய கல்வி கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட 3ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், முதல்வர் ரங்கசாமி, கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய கல்விக் கொள்கையில் மாணவர்கள் ஒரு நாள் புத்தகப் பை இல்லாமல் பள்ளிக்கு வரும் திட்டத்தையும் வாட்டர் பெல் முறையையும் அறிமுகப்படுத்தி வைத்தனர். பின்னர் விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பேசினார்.
அவர் பேசுகையில் புதுவையில் அமலாகியுள்ள புதிய கல்விக் கொள்கை தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கிறது. அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஆனால் தமிழ் என பேசிவிட்டு அவர்கள் பிள்ளைகள் மட்டும் மாற்று மொழியையும் ஒரு பாடமாக பித்துக் கொண்டிருக்கும்.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி என கூறினார்கள். ஆனால் யாருக்குமே கல்வி சீராகவே கிடைப்பதில்லை. புதுவைக்கு வருகை புரிந்த தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி, புதிய கல்விக் கொள்கையில் தமிழை பறித்துவிட்டார்கள் என கூறுகிறார். சிபிஎஸ்இ பாடத்திட்டம்22 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இது கூட அவருக்கு தெரியவில்லை.
அவர் ஒரு பாடநூல் கழகத்திற்க தலைவராக இருக்கிறார் என்பதுதான் வேதனையாக இருக்கிறது. அதோடு புதுவை ரங்கசாமியை தலையாட்டி பொம்மை என விமர்சனம் செய்துள்ளார். இதற்கு நான் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். புதுவையில் ரங்கசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.
அவரை தலையாட்டி பொம்மை என கூறுவதா, யார் யாருக்கோ வாலை ஆட்டிவிட்டு பதவி பெற்றவர்தான் இந்த லியோனி. தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையால் புதுவையில் கல்வியில் முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வருவோர் புதிய கல்விக் கொள்கையை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. இவ்வாறு லியோனியை தமிழிசை சவுந்திரராாஜன் காட்டமாக விமர்சித்திருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications