1ம் வகுப்பு சிறுமியிடம் 4 மாதமாக அத்துமீறிய ஆசிரியர்.. ஆவேசமான பொதுமக்கள்.. பள்ளிக்கு சீல்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: 1ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த பள்ளிக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தண்டனை கொடுக்கப்படும் என்று கூறியுள்ள மாவட்ட ஆட்சியர், பள்ளி நிர்வாகத்தில் உள்ள அனைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

புதுச்சேரி தவகக்குப்பம் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு அப்பள்ளி ஆசிரியராலேயே பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் அந்த சிறுமி உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் உடனடியாக பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது, அவர் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்தது.

Puducherry Private School Sexual Harassment

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். ஆனால் அதற்கு பள்ளி நிர்வாகம் முறையாக பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. பின்னர் காவல்துறையினரிடம் புகார் அளித்த போதும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளியின் உரிமையாளர் ஒரு கட்சிக்கு நெருக்கமாக இருப்பதால், அந்த பள்ளி மீது நடவடிக்கை தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து சிறுமியின் உறவினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தனியார் பள்ளிக்குள் புகுந்து மக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள் பள்ளியை சூறையாடினர். இதனைத் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மணிகண்டன் என்பவரை அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதன்பின் ஆசிரியரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தனியார் பள்ளியை மூடி சீல் வைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து குலோத்துங்கன் பேசுகையில், பாலியல் சீண்டல் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தண்டனை பெற்று கொடுக்கப்படும். இந்த பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது தனியார் பள்ளியை சீல் வைத்து மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதே மாதிரியான சம்பவங்கள் பாண்டிச்சேரியில் நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி நிர்வாகத்தில் உள்ள அத்தனை பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் விசாரணையில், சிறுமிக்கு 4 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+