பெண் உயிரை பறித்த செல்போன்.. கணவருடன் பேசியபோது மாடியிலிருந்து விழுந்து பலி!
Recommended Video
புதுச்சேரி: கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது இரண்டாவது மாடியிலிருந்து இளம்பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ஜீவானந்தபுரத்தில் வசிக்கும் திருமலை என்பவரின் மகள் செல்வி. 22 வயதான இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம், நல்லறிக்கை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.

பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு வந்த செல்விக்கு பெண் குழந்தை பிறந்து தற்போது 9 மாதங்கள் ஆகிறது. குழந்தை குறிப்பிட்ட வயது வளரும் வரை பெற்றோர் வீட்டில் இருப்பதென செல்வி முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரவணன் அவ்வப்போது புதுச்சேரி வந்து தனது மனைவி மற்றும் குழந்தையை பார்த்து செல்வார்.

இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி இரவு வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்த, செல்வி தனது கணவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர் வீட்டின் மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டவுடன் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது செல்வி தலை மற்றும் உடலில் பலத்த காயத்துடன் மயக்க நிலையில் கிடந்தார்.

உடனடியாக செல்வியை மீட்ட பெற்றோர்கள் அவரை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காததால் பரிதாபமாக செல்வி உயிரிழந்தார். இதுகுறித்து செல்வியின் தந்தை அளித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவருடன் பேசி கொண்டிருந்தபோது இளம்பெண் மாடியில் இருந்து தவறி விழுந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சம்பவம் நடைபெற்றபோது செல்வி கீழே விழும் காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்துள்ளது. நெஞ்சை பதற வைக்கும் அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications